அருள்மிகு உத்தர குருவாயூரப்பன் திருக்கோவில் (நங்கநல்லூர்)

God Name : ஸ்ரீ குருவாயூரப்பன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

விஷ்ணு நம்பூதிரியின் அஷ்டமங்கள பிரசன்னம் வெளியிட்ட விதிகளின்படி இங்குள்ள சந்நிதிகள் அமைக்கப்பட்டு, மூர்த்திகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மூலவர் குருவாயூரில் உள்ளது போலவே இருந்தாலும், இவர் 7 யவம் குறைவாக 111 யவம் உள்ளார். (1 யவம் என்பது 6ல் ஒரு பங்கு). பில்வமங்களம் இங்கு பசும்பாலை நைவேத்தியம் செய்தபடியால், இன்றளவும் முதல் நைவேத்தியம் பசும்பால். அவர் அப்பிரதட்சிணாமாக கோவிலுக்குள் வந்ததால், பக்தர்களும் அப்பிரதட்சிணாமாக வருகின்றனர். ஆவணியில் சூர்ய நமஸ்கார ஹோமம், ஐப்பசியில் தன்வந்திரி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ குருவாயூரப்பன் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவரது அழகிய திருமேனி, குருவாயூரில் உள்ளது போலவே இருப்பதால் தரிசிக்க ஆனந்தம் கிடைக்கின்றது. பகவதி இங்கு சிலை உருவாக இல்லாமல் திருவிளக்கு ஜோதியாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ பிரசன்ன விநாயகர், தர்ம சாஸ்தா, சங்கர்ஷணர், பஞ்சலோக ஹனுமன், மற்றும் பில்வமங்களம் ஆகியோரின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கின்றனர். கிழக்கு பார்த்து ஐயப்பனும் அக்னி மூலையில் நவக்ரஹங்களும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். ஆல் மற்றும் அரசு பிணைந்த மரத்தடியில் சங்கர்ஷணர் சந்நிதி - அதன் முன் உள்ள பஞ்சலோக மேருவிற்கு அர்ச்சனை செய்கின்றனர். அஷ்டதிக் பாலகர்களுடன் கூடிய கொடிமரம் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.