அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் திருக்கோவில் (சிங்கப் பெருமாள் கோவில்)

God Name : மூலவர்: ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர், உற்சவர்: பிரஹ்லாத வரதன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

'பாடல்' என்றால் சிகப்பு, 'அத்ரி' என்றால் குன்று. ஆகவே பாடலாத்ரி என்பது சிவந்த குன்றைக் குறிக்கும். இங்குள்ள மூலவர் மிகப் பெரிய திருமேனியுடன், குன்றையே உடம்பாகக் கொண்டு, குன்று போல் காட்சி அளிப்பதால் பாடலாத்ரி நரசிம்மர் எனும் திருநாமம் கொண்டார். தூணிலிருந்து வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த அதே உக்ர ஸ்வரூபத்தை தரிசிக்க ஆசை கொண்ட ஜாபாலி மகரிஷி, இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். தவத்தில் மகிழ்ந்து அவருக்கு பிரத்யட்சமான நரசிம்மர், அவரது வேண்டுகோளின்படி, அதே உக்ர ஸ்வரூபத்தில் சேவை சாதிக்கிறார். பிரதோஷ காலத்தில் அவதரித்தவர் நரசிம்மர். பிரதோஷ வழிபாடு உகந்தது. மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறும். அவதார நட்சத்திரமான ஸ்வாதியில் விசேஷமாக கொண்டாடுவார்கள். இது அபிமான ஸ்தலம், அஷ்ட நரசிம்ம க்ஷேத்ரங்களுள் ஒன்று. அஷ்ட நரசிம்ம க்ஷேத்ரங்கள்: 1. சிங்க பெருமாள் கோவில் (செங்கல்பட்டு), 2. சோளிங்கர் (வேலூர்), 3. பூவரசங்குப்பம் (விழுப்புரம்) 4. பரிக்கல் (விழுப்புரம்), 5. அந்திலி (விழுப்புரம் - திருக்கோவிலூர்), 6. சிங்கர்குடி (பாண்டிச்சேரி) 7. நாமக்கல், 8. சிந்தனைவாடி
மூலவர்: ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர், உற்சவர்: பிரஹ்லாத வரதன், தாயார்: அஹோபிலவல்லி. மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டு, அமர்ந்த கோலம். உக்ர ஸ்வரூபமாக காட்சி தருகிறார். திரிநேத்ரதாரி. சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன், திருமார்பில் மஹாலட்சுமியைத் தாங்கியுள்ளார். சஹஸ்ரநாம மாலை மற்றும் சாளக்ராம மாலை அணிந்துள்ளார். எட்டடி உயர ஆஜானுபாகு ஆகிருதியுடன் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்தியான பிரஹ்லாத வரதன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பிரதோஷ நரசிம்மர் மற்றும் ஸ்ரீநிவாசர் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்கள் மிகவும் அழகாக உள்ளன. தாயார் அஹோபிலவல்லி மூலஸ்தானத்தின் வலப்புறமாக சந்நிதி கொண்டுள்ளார். இடப்புறமாக ஆண்டாளின் சந்நிதி உள்ளது. ஆழ்வார்கள் மூலவராகவும், உற்சவர்களாகவும் தரிசனம் தருகின்றனர். நரசிம்மர் குகை போன்ற கருவறையில், மலையையே உடம்பாகக் கொண்டுள்ளதால், ஸ்வாமியை வலம் வருவதற்கு, மலையையும் வலம் வர வேண்டும். இது சிறப்பான கிரிபிரதக்ஷிணம் ஆகிறது. இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.