அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோவில் (பொன் பதர் கூடம்)

God Name : மூலவர்: சதுர்புஜ ராமர், உற்சவர்: கோதண்டராமர், விசேஷ மூர்த்தம்: தர்ப்பசயன சேதுராமர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஆதியில் லட்சுமி நரசிம்மர் கோவிலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு தவம் செய்து கொண்டிருந்த தேவராஜ மகரிஷி செய்த யாகத்தில் பிரத்யட்சமான சதுர்புஜ ராமரை இங்கேயே கோவில் கொண்டு, பக்தர்களுக்கு அருளும்படி, மகரிஷி வேண்டிக் கொண்டதால், இங்கு ராமர் எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு. காஞ்சிபுரத்திலிருந்து திருவஹீந்திரபுரம் போவதற்காக புறப்பட்ட ஸ்வாமி வேதாந்த தேசிகர், போகும் வழியில் இத்தலத்தில் ஒரு நாள் தங்கினார். கடலை வியாபாரி ஒருவன், தனது நிலத்தில் குதிரை ஒன்று மேய்வது கண்டு, ஸ்வாமி தேசிகரிடம் போய் விபரத்தைக் கூறினான். தேசிகர் சென்று பார்த்தபோது குதிரை மேய்ந்த இடமெல்லாம், பொன்மணிகள் உதிர்ந்திருப்பதைக் கண்டார். இது ஹயக்ரீவரின் திருவிளையாடல் என்று கூறினார். இந்த பொன் மணிகளை தூற்றியபோது 2 கி.மீ சுற்றளவுள்ள இடங்களிலெல்லாம் பொன் மணிகளாக சிதறியதாம். இதனால் இவ்வூருக்கு பொன் பதர் கூடம் என்ற பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு. இந்த பொன் கதிர்களை சாலில் (பெரிய மண் பானை) வைத்து பாதுகாத்த இடம் சாலூர், மற்றும் எடைபோட்ட இடம் எடையூர் என்றும் இரு ஊர்கள் அருகாமையில் உள்ளன. நள வெண்பா பாடிய புகழேந்தி பிறந்த ஸ்தலம். 63 நாயன்மார்களுள் ஒருவரான கூற்றுவ நாயனார் வாழ்ந்த ஸ்தலம்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சதுர்புஜ ராமர், கிழக்கே திருமக மண்டலம் கொண்டு அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். சங்கு சக்கரதாரியாய், வில் அம்புகளுடனும், அபய வரத ஹஸ்தங்கள் கொண்டும் காட்சி தருவது அற்புதமாக இருக்கிறது. சதுர்புஜங்களுடன் கூடிய உற்சவ மூர்த்தி கோதண்ட ராமர் மிகவும் அழகான விக்ரஹம். நின்ற திருக்கோலம். வலக்காலை விட இடக்காலை சற்று முன்னால் வைத்துள்ளார். நளினமான விரல்கள், கூர்மையான நகங்கள், முழங்கால் மூட்டு, கை ரேகைகள் ஆகியனவற்றை துல்லியமாக காட்டும் விதத்தில் வடிக்கப்பட்ட அற்புதமான விக்ரஹம். பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. இடது புறம் லட்சுமணரும், வலது புறம் சீதா தேவியும் இடம் பெற்றுள்ளனர். விசேஷ மூர்த்தமாக தர்ப்பசயன சேதுராமர் தனி சந்நிதி கொண்டுள்ளார். தர்ப்பை ஆசனத்தில் கிடந்த கோலத்தில் ஸ்ரீ ராமரும், கூப்பிய கரங்களுடன் லட்சுமணரும், சமுத்ர ராஜனும், ஆஞ்சநேயரும் சேவை சாதிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.