அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் (திருக்கழுக்குன்றம்)

God Name : மூலவர்: ருத்ரகோடீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

திருக்கழுக்குன்றத்தின் முதன்மையான ஸ்தலம். 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். கோவிலின் வாசலில் நந்தி தேவரின் அருகில், பூமியில் கொஞ்சம் புதையண்டு காணப்படும் கருடன், கை கூப்பிய நிலையில் காட்சி தருகின்றார். பச்சை மரகதக்கல் திருமேனி என்பர். சிவநிந்தனை செய்த கருடனை, நந்தி தேவர் தன் மூச்சுக்காற்றால் புதையச் செய்ததாக ஸ்தல வரலாறு. கருடன் செய்த சிவ நிந்தனையால் கோபமுற்ற நந்திதேவர், கருடனை தன் மூச்சுக்காற்றால் அலைக்கழித்து தண்டித்தார். கருடனை விட்டுவிடச் சொல்லி அடங்காமல் வாதம் செய்தார். பின் தான் செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாய் பூலோகம் வந்து, இங்கு அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார் என புராண குறிப்பொன்று கூறுகிறது. சிவபெருமானின் அருளால் தோன்றிய ஒரு கோடி ருத்ரர்கள், திருமால் அசுரர்களுடன் போரிடும்போது, அவருக்கு உதவ அனுப்பப்பட்டனர். போரிட்டதனால் ஏற்பட்ட தோஷங்கள் விலக, ஒவ்வொரு ருத்ரரும் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதில் ஒரு கோடி லிங்கங்கள் உருவாகின. ஒவ்வொருவர் முன்பாகவும் சிவபெருமான் தோன்றி அருள் புரிந்து, பின்னர் ஒரே லிங்க வடிவமாக ஐக்கியம் கொண்டு இங்கு எழுந்தருளியதாக வரலாறு. இதனால் ருத்ரகோடீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். சிவபெருமானின் ஹ்ருதய பகுதியே இத்தலம் என்று கூறப்படுகிறது. ருத்ரன் என்றால் துன்பத்தை ஓட்டுபவன் எனப் பொருள். மேலான வழியில் செல்பவர் என்றும் கூறுவர். இறைவன் வெள்ளி விடையில் காட்சி தந்தருளிய ஸ்தலம். இங்கு ருத்ரகோடீஸ்வரரை வழிபட்டால், பலன் கோடியாக பெருகும் என்பர். இங்கு பிரதோஷ வழிபாடு விசேஷமானது. தேவார வைப்புத் தலம், சக்தி பீடம்.
மூலவர்: ருத்ரகோடீஸ்வரர், அம்பாள்: ருத்ர கோடீஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியிருப்பவர் ருத்ர கோடீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். அம்பாள் ருத்ர கோடீஸ்வரி எனப்படும் அபிராம சுந்தரி அழகே உருவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அம்பாள் ருத்ர கோடீஸ்வரியின் பார்வை அருகிலுள்ள வட்டப்பாறை காளி கோவிலை நோக்கி உள்ளது. 108 சக்தி பீடங்களில் 24வது பீடமாக இது ருத்ராணி பீடம் என்று சொல்லப்படுகிறது. கன்னிமூல விநாயகரும், சுப்ரமண்யரும் தரிசனம் தருகின்றனர். வேத விநாயகரிடம் ஆசி பெற்று ஆலய சுற்றுலா வந்தால், பன்னிரு கரங்களும் ஆறு திருமுகங்களும் கொண்டு மயில் மீதமர்ந்த ஆறுமுகப் பெருமானை தரிசிக்கலாம். அழகான திருவாசி. வள்ளி -தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். வித்யாசமான வடிவில் தட்சிணாமூர்த்தி. மனைவி சுயம்பிரபை தேவியுடன் புடைப்பு சிற்பமாகக் காட்சி தரும் அதிகாரநந்தி அற்புதமான புடைப்பு சிற்பத்தை நுழைவாசலில் காணலாம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீ காலாக்னி ருத்ர மூர்த்தியான ஸ்ரீ பைரவரை வழிபட சகலதோஷங்களும் விலகும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.