ஸ்ரீ விஜய வரதராஜப் பெருமாள் கோவில் (பாபுராயன்பேட்டை)
God Name : மூலவர்: ஸ்ரீ விஜய வரதராஜப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
மராட்டியரான கிருஷ்ணாஜியின் மகனான பாபுராயர் காஞ்சிபுரத்தில் தாசில்தாராக இருந்தார். தான் தினமும் பூஜிக்கும் பெருமாள் விக்ரஹத்தை உடன் கொண்டு வந்தார். தினமும் பூஜை முடித்து வரதராஜரை சேவிக்கும் பழக்கம் வைத்திருந்தார். ஒரு நாள் வரதராஜரை தரிசிக்க முடியாமல் போனதற்காக மிகவும் வருந்தினார். பாபுராயரின் கனவில் தோன்றி ஸ்ரீ வரதராஜர் பணித்தபடி, இந்த ஊரில் பாபுராயர் கோவில் எழுப்பியதாக வரலாறு. பாபுராயர் இவ்வூர் கோவிலையும், தெருக்களையும் நிர்மாணித்ததால் இவ்வூர் பாபுராயர்பேட்டை எனப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ விஜய வரதராஜப் பெருமாள், தாயார்: ஸ்ரீ விஜயவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ விஜய வரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டுள்ளார்.
உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக உற்சவப் பெருமாள் காட்சி தருகிறார்.
ஸ்ரீ விஜயவல்லித் தாயார் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் திருவுருவம் கொள்ளை அழகு.
பல்லி தேளைப் பிடித்திருப்பது போன்ற சிற்பம் விதானத்தில் உள்ளது. இதை தரிசித்தால் தோஷங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது. மண்டப விதானத்தில் உள்ள கமல சக்கரத்தை வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இவ்வாலயத்தில் தோசை நைவேத்யம் மிகவும் விசேஷமானது மற்றும் பிரசித்தி பெற்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.