அருள்மிகு ஸ்ரீ மஹா பெரியவா சதாப்தி மண்டபம்
God Name : இல்லை
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சார்யரான மஹா பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ஓர் சதாப்தி மண்டபம் உருவாகி உள்ளது.
நுழை வாசலில் இரண்டு பக்கங்களிலும் பெரிய யானைகளுடன் கூடிய படிக்கட்டுக்கள். பெரிய பெரிய வடிவங்களாக யானை, குதிரை, யாளி ஆகிய சிற்பங்கள் கொண்ட அழகிய தூண்கள் இடம் பெற்றுள்ளன. தேர் வடிவத்தில் உருவாக்கப்பட்ட கோவில். கோபுரத்துக் கலசம் தஞ்சை பெரிய கோவிலைப் போல அமைக்கப்பட்டுள்ளது.
மஹா மண்டபம், ப்ரஜா மண்டபம், ப்ரச்சார மண்டபம், மற்றும் பாதுகா மண்டபம் என நான்கு பகுதிகளாக கட்டப்பட்டுள்ளது. ஸ்வாமிகள் வாழ்ந்த 100 ஆண்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 100 கற்றூண்கள் தாங்கி நிற்கும் வகையில் கல் மண்டபம் இருக்கின்றது.
பிரதோஷ தாண்டவ சிற்பம், குரு பரம்பரையை விவரிக்கும் சிற்பம் ஆகிய சிற்பங்கள் அற்புதமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. விதானத்தில் வடித்துள்ள நவகிரகங்களின் சிற்பங்களும் தொங்கும் கல் சங்கிலிகளும் நேர்த்தியானவை. வளையம் போன்ற கற்சங்கிலிகள், கல் சாளரங்கள், சிம்மத்தின் வாயில் உருளும் கல் உருண்டை, அழகான அம்பாரி யானை, தேர் சக்கரங்கள் என சிற்ப வேலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பிரதான கருவறையில் மஹாபெரியவரின் திருவுருவத்தை தரிசிக்கலாம். உற்சவரின் திருவுருவம் ருத்ராட்ச மண்டபத்தில் உள்ளது. மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.