அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் (திருப்புட்குழி)
God Name : ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
ராவணன் சீதையை கவர்ந்து செல்கையில், அபயக்குரல் கேட்ட ஜடாயு, ராவணனுடன் போரிட்டு, சிறகுகள் இழந்து, ராமன் வரும்வரை உயிரைப் பிடித்து வைத்திருந்து, பின் நடந்தவற்றை விளக்கி உயிர் விடுகிறது. இதைக் கண்டு மிகவும் துயரமுற்ற ராமன், ஜடாயுவிற்கு பெரியப்பா ஸ்தானம் தந்து, மகன் செய்யும் கடமையாகச் செய்து முடித்தான். வீற்றிருந்த கோலத்தில், வலது திருவடியைத் தொங்கவிட்டு, இடது திருவடியை மடக்கி, வலது தொடையில் ஜடாயுவை வைத்து தகனம் செய்ததாகப் புராண செய்தி. ருத்ர பூமியாதலால், ஸ்ரீ ராமன் விஷ்ணு ரூபத்தில், ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்களுடன் எழுந்தருளி காட்சி தருகின்றார். ஜடாயுவிற்கு தகனக்கிரியை செய்யும்போது ஏற்பட்ட அக்னி சுவாலையின் தாக்கத்தால், ஸ்ரீ தேவி வலப்பக்கத்திலிருந்து பெயர்ந்து இடப்பக்கம் சென்று விட்டாள். இன்றும் ஸ்ரீ தேவி இடுப்பைத் தாழ்த்தி விலகிப் போகும் பாவத்தோடு காணப்படுகிறாள். தர்ப்பணம் அளிக்க வேண்டி - வில் நுனியால் தீர்த்தம் உண்டாக்கிய ஸ்ரீ ராமர், தர்ப்பணம் செய்து ஜடாயுவை மேலுலகம் அனுப்புகிறார். இது ஜடாயு தீர்த்தம் எனப் பெயருற்றது. தன்னை சம்ஸ்கரித்த கோலத்திலேயே இவ்வூரில் எழுந்தருளி வேண்டும் என ஜடாயு விண்ணப்பித்துக் கொண்டதன்பேரில், இத்தலத்தில் ஸ்ரீ ராமர் விஜய ராகவப் பெருமாளாகக் கோயில் கொண்டார் என ஸ்தல வரலாறு. புஷ்கரணியின் கிழக்கே ஜடாயுவிற்கு சிறிய கோயில் உள்ளது. பாலாறு, வேகவதி ஆகிய இரு நதிகளுக்கிடையே இந்த ஸ்தலமான புட்குழி இருக்கின்றது. புள் என்றால் பறவை, அதாவது ஜடாயு. ஜடாயுவுக்கு தகனக்கிரியை நடந்த இடம் என்பதால் புட்குழி எனப் பெயருற்றது. யாதவப்பிரகாசர் வாழ்ந்த ஸ்தலம். திருப்புட்குழி சீயர் அவதரித்த ஸ்தலம். சிறப்பு விசேஷங்கள்: புத்திர பாக்கியம் வேண்டும் பெண்கள் - கொஞ்சம் பயறு / கொள் மடைப்பள்ளியில் கொடுத்து வறுத்து வாங்கிக்கொண்டு, நனைத்து, மடியில் கட்டிக்கொண்டு மரகதவல்லித் தாயார் சந்நிதியில் படுத்திருந்தால், வறுத்த பயிர் முளைவிட்டால் பிள்ளைப் பேறு உண்டு எனப் பொருள். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. சப்த ராம க்ஷேத்ரங்களுள் ஒன்று.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தனது திருவடியைக் காட்டி, "இங்கே வா" என ஜடாயுவை அழைக்கும் தோரணையில் ஆஹ்வான ஹஸ்தம் கொண்டுள்ளார். தாயார் மரகதவல்லியின் சந்நிதி இடது பக்கமாக உள்ளது. மிகுந்த வரப்பிரசாதி என்பர். ஜடாயுவிற்கு தனி சந்நிதி இருக்கின்றது. உட்பிரகாரத்தில் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.