அருள்மிகு வேளுக்கை நரசிம்மர் திருக்கோவில் (காஞ்சி)

God Name : மூலவர்: ஸ்ரீ யோக நரசிம்மர், உற்சவர்: ஸ்ரீ முகுந்த நாயகன்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஸ்ரீ மந் நாராயணனைக் குறித்து காஞ்சியம்பதியில் அஸ்வமேதயாகம் மேற்கொண்ட பிரம்மனின் யாகத்தை தடுத்து அழிக்க வேகவதியாய் வேகமாக வந்தாள் சரஸ்வதி தேவி. அணையாய் சயனித்து வேகவதியை நாராயணன் தடுத்ததால் அந்தர்வாஹினியாக மறைந்தாள். பின்னர் பல வழிகளிலும் முயன்று, தடுக்க முடியாது போனதால் காபாலிகாஸ்திரத்தை பிரயோகித்து, அதிலும் தோல்வியைத் தழுவினாள். பிரம்மனின் யாகம் இனிதாக முடிய, யாகத்தீயில் தோன்றி அருள் புரிந்தார் ஸ்ரீ நரசிம்மர். பிரம்மன் வேண்டிக்கொண்டபடி அதே கோலத்தில் இங்கே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு. ஸ்ரீ நரசிம்மர் ஹஸ்திசைல குகையிலிருந்தபடியே வேறொரு நரசிம்ம வடிவம் கொண்டு மேற்குத் திசையில் அசுரர்களை துரத்தி, மீண்டும் அவர்கள் வராமலிருக்க இங்கேயே யோக நரசிம்மராய் அமர்ந்தார். வேள் என்றால் ஆசை என்று அர்த்தம். நரசிம்மர் ஆசையாக இங்கு எழுந்தருளியதால் வேள் இருக்கை எனப் பெயர் கொண்டு பின் நாளடைவில் மருவி வேளுக்கை என்றாயிற்றாம். கிரக தோஷங்கள் நீங்கவும், தீவினைகள் அகலவும் இவருக்கு பானகம் நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். பிரதோஷ வழிபாடு சிறந்தது. அமாவாசை தினங்களில் நடைபெறும் திருமஞ்சன நீரை தெளித்துக் கொண்டால் தீவினைகள் நம்மை அண்டாது என பட்டாச்சாரியார் தெரிவிக்கின்றார். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஸ்ரீ யோக நரசிம்மர், உற்சவர்: ஸ்ரீ முகுந்த நாயகன், தாயார்: ஸ்ரீ வேளுக்கை வல்லி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ யோக நரசிம்மர் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். ஆளரி, அழகிய சிங்கர் ஆகிய திருநாமங்களும் உண்டு. சூரிய-சந்திரர்கள், அக்னி ஆகியவைகளை முக்கண்களாகக் கொண்டு, கம்பீரமாக இவர் அமர்ந்திருக்கும் அழகே தனி. ஆள் என்பது நரனைக் குறிக்கும் சொல். அரி என்றால் சிம்மம் என்று அர்த்தம். எனவே ஆளரி எனும் திருநாமம் கொண்டார். உற்சவராக முகுந்தநாயகன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தாயார் ஸ்ரீ வேளுக்கைவல்லி எனப்படும் அம்ருதவல்லி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பெருமாளுக்கு எதிரேயுள்ள சந்நிதியில் மாலை மாற்றும் கோலத்தில் காட்சி தருகின்றாள். ஆண்டாள், சுதர்ஸனர், சிறிய திருவடி மற்றும் பெரிய திருவடி ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். தலையை சற்று சாய்த்தபடி வித்தியாசமான கோலத்தில் காணப்படும் பெரிய திருவடியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ப்ருகு மகரிஷிக்கு நின்ற திருக்கோலத்தில் முகுந்த நாயகனாக தரிசனம் தந்தவர் ஸ்ரீ நரசிம்மர். கச்சி அத்புத கேசரி என்று போற்றுகின்றனர். தாயார் சன்னதி அருகே சிறிய சன்னதி ஒன்றில் ஆதிசேஷன் எழுந்தருளி உள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.