ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - சங்கர மடம் (காஞ்சி)

God Name : சந்திரமௌலீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஸ்ரீ ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களுள் ஒன்று. கி.மு. 482 ஆம் ஆண்டு - அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மடாலயம் என்று கூறப்படுகிறது. பெற்ற தாயின் அனுமதியோடு, தனது எட்டாம் வயதில் சந்நியாசம் பெற்ற ஆதி சங்கரர் வேதங்கள் கூறும் உண்மைகளை மக்களுக்கு விளக்கவும், சமூகப் பணிகளுக்கு வித்திடவும், ஆன்மீகம் தழைத்தோங்கவும், தனது 32வது வயதில் காஞ்சி மாநகர் வந்தடைந்தார். தவறாக வழிகாட்டக்கூடியவற்றை விலக்கி, அத்வைத வேத சித்தாந்தத்தை நிலைநாட்ட, நாட்டில் பல பீடங்களை ஏற்படுத்தினார். காஞ்சியில் காமகோடி பீடம் நிறுவினார். ஆதி சங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கம் இங்கு ஸ்ரீ சந்த்ர மௌலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறது. மூன்று கால பூஜைகள், கோ பூஜை, கஜ பூஜை, ருத்ராபிஷேகம் அனைத்தும் தரிசிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஸ்ரீமஹாஸ்வாமிகளின் பிருந்தாவனத்தில் நித்ய பூஜைகளும், மாலை 6.00 மணிக்கு தீப வழிபாடும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்வாமிகள் ஜெயந்தி விழா சிறப்பாக நடக்கிறது. வியாச பூஜை மற்றும் சதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் எனப்படும் மஹா ஸ்வாமிகள், நூறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்து ஆதி சங்கரரின் சமயப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் துரிதமாக செயல்படுத்தி, ஞான முக்தி அடைந்தார். அதிஷ்டான சந்நிதியில், மஹா பெரியவாளின் திருவுருவம் தரிசிக்கும்போது சிலிர்க்கிறது. கண்களை விட்டு அகலாத காட்சியாகவும், மனதை விட்டு அகலாத நினைவுகளாகவும் இருக்கின்றது. ஆதிசங்கரரின் பெரிய திருவுருவம் முன்பாக மண்டபத்தில் அமர்ந்து தியானிக்க, மனதிற்குள் ஒரு சந்தோஷம் பிறக்கிறது. 69வது பீடாதிபதியும், தற்போதைய பீடாதிபதியுமான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், 70வது பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். பெரியவா என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், பாலப்பெரியவா என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் மடத்தை வழிநடத்திச் செல்கின்றனர். பெரியவாளையும், பால பெரியவாளையும் தரிசித்துவிட்டால் மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது. இவர்களது ஆசிகளைப் பெற, பலவிதமான கோரிக்கைகளுடன் காத்திருக்கும் பக்தர்கள் ஏராளம். பல்வேறு தொண்டு நிறுவனங்களுடனும், தனி நபர்களுடனும் இணைந்து சங்கர மடம் - சமய, ஆன்மீக, சமூகப் பணிகளை செம்மையாக செய்து வருகிறது. பொறியியல் கல்லூரி, அறிவியல் கல்லூரி, ஆயுர்வேதக் கல்லூரி, மருத்துவப் பல்கலைக்கழகம், பாடசாலைகள், சர்வதேச நூலகம், வேத பாடசாலைகள் போன்றவைகளை கல்வி மேம்பாட்டிற்கும், மருத்துவமனைகள், கண் சிகிச்சை முகாம்கள் ஆகியனவற்றை ஆரோக்கிய வழிகாட்டலுக்கும் நடத்தி வரும் சங்கர மடத்தின் தொண்டு பயனுள்ளவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, கிராம சுகாதார மேம்பாடு போன்ற நற்பணிகளையும் நடத்தி வருகிறது சங்கர மடம். ஆதி சங்கரர் கொண்டு வந்த பஞ்ச லிங்கங்கள் : 1. முக்திலிங்கம் (கேதாரம்) 2. வரலிங்கம் (நீல் கண்ட்) 3. மோட்சலிங்கம் (சிதம்பரம்) 4. போகலிங்கம் (சிருங்கேரி) 5. யோகலிங்கம் (காஞ்சி)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.