அருள்மிகு காஞ்சி காமகோடி ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் (காஞ்சி)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
ஸ்தல வரலாறு: ஆதியில், இக்கோவில் இருந்த பகுதியை சுற்றிலும் ஷெண்பகக் காடாக இருந்தது. இந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்த தேவர்களையும், ரிஷிகளையும் அச்சுறுத்தி இம்சித்து வந்த பந்தகாசுரன் மிகுந்த பலசாலியாக விளங்கினான். ஐந்து வயது சிறுமியால் மட்டுமே தனது உயிர் பிரிய வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன். தேவர்களும் முனிவர்களும் இந்த அசுரனுக்கு பயந்து காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு நாள், இவ்வனத்தின் நடுவே ஒரு மண்டபத்தில் அன்னை பராசக்தி அமர்ந்திருந்தாள். தேவர்கள் அருகே சென்றதும் மறைந்து விட்டாள் அன்னை. உருவம் - அருவம் ஆனபோதிலும், கண்ணில் தோன்றி மறைந்த அந்த திருவுருவத்தை மனதில் நிறுத்தி வழிபட்டனர். தேவர்கள் கிளிகளின் வடிவம் கொண்டு வழிபட்டதாக கூறுவர். உரிய சமயத்தில், ஐந்து வயது நிரம்பிய பாலகியின் வடிவத்தில் தோன்றிய அன்னை, பந்தகாசுரனை சம்ஹாரம் செய்து, தேவர்களையும் ரிஷிகளையும் காப்பாற்றினாள். அன்னையின் உத்தரவுப்படி, அசுரனின் பிரேதத்தை, இவ்வனத்தில் புதைத்து, ஜயஸ்தம்பத்தை அதன் மீது நாட்டினார்கள். காயத்ரி மந்திரங்களை 24 தூண்களாக அமைத்து, அதன் மீது மண்டபம் எழுப்பினார்கள். மண்டபத்துள் விக்ரஹ பிரதிஷ்டை செய்து, தியானத்தில் பார்த்த தேவர்களும் முனிவர்களும் ஓர் அதிசயத்தைக் கண்டனர். விக்ரஹம் இருந்த இடத்தில், இப்போது நாம் தரிசிக்கும் அன்னையின் திவ்ய ஸ்வரூபம் இருந்தது. ஆதி சக்தியான ராஜ ராஜேஸ்வரி, தானே பாலகி வடிவில் வந்து பந்தகாசுரனை வதைத்ததையும், பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தில் எழுந்தருளியிருப்பதையும், அனைவர்க்கும் உணர்த்தினாள். கா என்கிற கலைமகளையும், மா என்கிற திருமகளையும், க்ஷ என்கிற மலைமகளையும், மூன்று நேத்ரங்களாக கொண்ட பராசக்தி என்பதால் காமாக்ஷி என்னும் திருநாமம் கொண்டாள். அடியார்கள் விரும்பியவற்றை, வரமாக அருளுவதாலும் காமாக்ஷி என்ற பெயர் கொண்டாள். ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கர யந்திர பிரதிஷ்டையில் அன்னை சூட்சும ரூபத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். இந்த ஸ்ரீ சக்கரம்தான் காம கோடி பீடம். இந்த ஸ்ரீ சக்கரத்தை பூஜை செய்து, பிரம்மன் இழந்த தன் கண் பார்வையைப் பெற்றதாக ஸ்தல வரலாறு. சக்தி பீடம்: ஆதி சக்தி பீடம் - ஸ்ரீ காமகோடி பீடம் - ஸ்ரீ சக்கர பீடம் என போற்றப்படும் ஸ்தலம். தட்சனால் அவமானமுற்ற தாட்சாயிணி யாகத்தீயில் குதித்து தனது ஸ்தூல உடலை நீத்ததும், அவளது சரீரத்தை தன் தலை மீது வைத்துக் கொண்டு, சிவபெருமான் தாண்டவமாடினார். அப்போது அம்பிகையின் திருமேனி துண்டு துண்டாக சிதறி விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகும். அவற்றுள் அன்னையின் நாபி விழுந்த இடமே காஞ்சிபுரம். நாபிஸ்தான - ஓட்டியாண பீடம் என்பர். காஞ்சிபுரத்திலுள்ள ஆலயங்கள் யாவும் காமாட்சியின் கோவிலை நோக்கியே அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலின் விழாவின்போதும், அந்தந்த ஆலயத்து உற்சவ மூர்த்திகள், காமாட்சி கோவிலைச் சுற்றி வரும் சம்ப்ரதாயம் உள்ளது. காஞ்சி கோவில்களில் தனியாக அம்பாள் சந்நிதி கிடையாது. காமக்கோட்டமே பொதுவான சந்நிதி ஆகும். தீர்த்தக்குளம்: தீர்த்தமே பஞ்ச கங்கை எனப் போற்றப்படும் தீர்த்தக் குளம் ஆகும். மல்லகன் எனும் அசுரனை சம்ஹாரம் செய்த விஷ்ணுவும், அசுரனின் ரத்தத்தைக் குடித்ததால் அசுர குணங்கள் கொண்டு விஷ்ணுவையே எதிர்த்த பூத கணங்களும், இந்த தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு. தீர்த்தக் குளத்தினருகே நின்ற - வீற்றிருந்த - சயனித்த எனும் மூன்று காலங்களில் மஹாவிஷ்ணு பூத நிக்ரஹப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். பூத கணங்களும் இருக்கின்றனர்.
ஆதி சக்தி பீடம் - ஸ்ரீ காமகோடி பீடம் - ஸ்ரீ சக்கர பீடம் - சப்த மோட்ச ஸ்தலங்களுள் ஒன்று. மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை காமாட்சி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். சாந்தமே உருவாக, சகலாபரண பூஷிதையாக காயத்ரி மண்டபத்தினுள், பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். சதுர்-புஜங்களில் பாசம், அங்குசம், ஐவகை புஷ்ப பாணங்கள், கரும்பு வில் ஆகியன கொண்டு தென்திசை நோக்கி, பரபிரம்ம ஸ்வரூபிணியாக தரிசனம் தருகின்றாள். ஸ்ரீ சக்கரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்தில் உறைபவள் என்பதால் மூலஸ்தானமும் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. மூன்றரை சுற்றுப் பிரகாரமே இருப்பதால் பிரதக்ஷிணம் செய்ய இயலாது. ஸ்ரீ காமாட்சியின் எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரத்திற்கே அர்ச்சனை மற்றும் பூஜை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வழக்கமாக பீடத்தின் கீழ் ஸ்ரீ சக்கரம் அமைப்பார்கள். உக்ர ஸ்வரூபிணியாக இருந்த அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக, ஸ்ரீ ஆதி சங்கரர் தேவியின் முன்புறமாக ஸ்ரீ சக்கரத்தை அமைத்து, சாந்த ஸ்வரூபிணியாக மாற்றினார் என ஐதீகம். ஸ்ரீ சக்கரத்தில் அஷ்ட லட்சுமிகள் இருக்கின்றனர். மூலவருடன் சேர்த்து தபஸ் காமாட்சி, பிலகாஸ காமாட்சி, உற்சவ காமாட்சி, மற்றும் பங்காரு காமாட்சி எனப்படும் காமாட்சியின் பாதங்கள் என பஞ்ச காமாட்சிகளை தரிசிக்கலாம். மூலஸ்தானமருகேயுள்ள சிறிய சந்நிதி ஒன்றில் தபஸ் காமாட்சியை தரிசிக்கலாம். சிவபெருமானை வேண்டி அன்னை தவம் செய்த இடம் என்பர். பரபிரம்ம ஸ்வரூபிணியான மூலவராக தரிசனம் தரும் முன் ஆகாசத்தில் ஒரு துளையில் இருந்தவளே பிலகாஸ காமாட்சி என ஐதீகம். நின்ற திருக் கோலத்தில் அழகே உருவாகக் காட்சி தருபவள் உற்சவ காமாட்சி. பாத வடிவிலுள்ள பங்காரு காமாட்சியை, காணும் பொங்கலன்று விசேஷ ஆராதனை செய்கின்றனர். அஷ்டபுஜக் கலைமகள், பங்காரு காமாட்சி ஆகியோரின் சந்நிதிகள் உட்பிரகாரத்திலேயே இருக்கின்றன. மூலஸ்தானத்து வாசலின் எதிரில் அன்னபூரணியை தரிசிக்கலாம். இந்த சந்நிதியில் தர்ம துவாரம், பிக்ஷா துவாரம் ஆகிய துவாரங்கள் உள்ளன. ஐப்பசி மாசத்தில் அன்னாபிஷேகம் செய்வார்கள். பார்க்க ஆனந்தமாக இருக்கும். முன் மண்டபத்தின் தென்புறம் வாராஹி அம்மனையும், எதிரே சந்தான ஸ்தம்பத்தையும் தரிசிக்கலாம். ஸ்தம்பத்தை பிரதக்ஷிணம் செய்து வழிபடுபவர்களுக்கு வம்ச விருத்தி உண்டாகும். முதல் பிரகாரத்து தனி சந்நிதியில் ஆதி சங்கரர் யோகாசனத்தில் த்யான நிலையில் அமர்ந்துள்ளார். உற்சவ விக்ரஹமும் உண்டு. துர்வாச முனிவர், துண்டீர மகாராஜா, காசி க்ஷேத்ரத்து கால பைரவர், மஹிஷாசூரமர்த்தினி, பூரணா - புஷ்களா சமேத சாஸ்தா ஆகியோரை தரிசனம் செய்யலாம். ஸ்தம்ப பிரதிஷ்டா விநாயகர், விக்ன நிவாரண கணபதி, இஷ்ட சித்தி விநாயகர், சௌபாக்ய கணபதி, சந்தான கணபதி, திருமஞ்சன விநாயகர், ஸ்ரீ வரசக்தி விநாயகர் என ஏழு அழகிய விநாயகர்கள் இத்தலத்தில் அமர்ந்து ஆசி வழங்குகின்றனர். வெளி பிரகாரத்து தனிக் கோவிலில் எழுந்தருளியுள்ள லிங்கபேசரை, தற்போது விஸ்வநாதர் கோவில் என்கின்றனர். நான்கு புறமும் வாசல்கள் கொண்ட ஆலயமாகினும், பிரதான வாசல் கிழக்கு நோக்கியே உள்ளது. வாசலை ஒட்டியுள்ள முன் மண்டபத்தில் நெமிலி பாலா திரிபுர சுந்தரியின், குழந்தை வடிவ படம் வைக்கப்பட்டுள்ளது. சப்த மோட்ச ஸ்தலங்களுள் காஞ்சியும் ஒன்று எனப்படுவதால் முக்தி நகர் என்பார்கள். (அயோத்தி, மதுரா, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.