அருள்மிகு வேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் (சத்தியமங்கலம்)

God Name : ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். மூல விக்ரகமும், உற்சவ விக்ரகமும் கண்களையும் மனதையும் விட்டு அகலாத வண்ணம் எழில் தோற்றம் கொண்டுள்ளது. மஹாலட்சுமித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். வலதுபுறமாக ஸ்ரீ லட்சுமிநாராயணர் அமர்ந்த கோலத்திலும், பின்புறம் ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் புஜங்க சயனக் கோலத்திலும் தரிசனம் தருகிறார்கள். சுதர்சன சக்ரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மரை சேவிக்கலாம். ஸ்ரீ அய்யப்பனும் சந்நிதி கொண்டுள்ளார். மேற்குப் பிரகாரத்தில் சகல தோஷங்களையும் போக்கும் பல்லியின் வடிவத்தைக் காணலாம். கல்லில் உருவான கருடக் கம்பத்தின் உச்சியில் தாமரை வடிவிலான தீபக்குழியில் தீபம் ஏற்றுகின்றனர். உருள் சக்கரத்தின் மூலம் பதினெட்டு லிட்டர் எண்ணெயை தீபக்குழிக்குள் ஏற்றுகின்றனர். ஸ்ரீ ஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி - சொர்க்கவாசல் திறப்பு ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஸ்ரீ ராமாநுஜர், வேதாந்த தேசிகர் ஆகிய மகான்கள் தரிசித்த ஸ்தலம் என்ற பெருமைக்குரியது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.