அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோவில் (மொடச்சூர்)

God Name : சோமேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

அகஸ்திய மாமுனி தாம் செல்லும் பாதையில் எல்லாம் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபடும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். இத்தலத்திற்கு வந்தபோது இங்கு நீர் நிலை இல்லாதது கண்டு வருத்தமுற்று, தமது தவ வலிமையினால் இடி மின்னலுடன் கூடிய மழையை வரவழைத்து, நீர்ச்சுனை ஒன்றினை உருவாக்கி, பின்னர் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு. சிவாலயத்திற்குள் இடி விழுந்த இடத்திற்கு சேதம் ஏதுமில்லை. இருப்பினும் அருகே இருந்த விநாயகரை பாழி விநாயகர் என்று அழைக்கின்றனர். பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதால் இத்தலத்திலுள்ள முருகனை செவி சாய்த்த குழந்தை வேலாயுதஸ்வாமி, குறை கேட்கும் குழந்தை வேலன் என்று கொண்டாடுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோமேஸ்வரர். அம்பாள் சௌந்தரநாயகி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். பாழி விநாயகர், குழந்தை வேலாயுதஸ்வாமி, சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, கால பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.