அருள்மிகு ஸ்ரீ வித்யாம்பிகை திருக்கோவில், முடிச்சூர்
God Name : ஸ்ரீ பீமேஸ்வரன்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
விஸ்வம் எனும் சிவ பக்தன், தன் மகள் வாசுகியின் கல்யாணம் செய்ய முடியாமல் தவித்தபோது, பீமேஸ்வரரும் - வித்யாம்பிகையும், நல்ல விதமாக திருமணத்தை முடித்துக் கொடுத்தனர் என ஸ்தல வரலாறு. மஹா மண்டபத்தில் நிறைய மஞ்சள் சரடுகள் தொங்குகின்றன. நல்ல வாழ்க்கைத் துணை வேண்டுவோர் கோவிலில் தரும் மஞ்சள் சரடை வாங்கிக் கொண்டு, பீமேஸ்வரரையும் - வித்யாம்பிகையையும் பிரார்த்தனை செய்து கொண்டு கட்டிக் கொள்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ பீமேஸ்வரன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ வித்யாம்பிகை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். திருமணக் கோலத்தில் காட்சி தரும் பார்வதி - பரமேஸ்வரன் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. ஷோடஸ உபச்சாரங்களுடன் சாயரட்சை பூஜை நடைபெறுகின்றன. சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. நர்த்தன கணபதி, யோக ஹனுமார், ஸ்ரீ தேவி பூதேவி சமேத தாமோதரப் பெருமாள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஒரு நந்தவனத்தில் ஏழு தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டதைப் போல காட்சி தரும் ஏழு விமானங்களுடன் காணப்படும் ஆலயம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.