அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் (பவானி)
God Name : மூலவர்: ஆதிகேசவப் பெருமாள், உற்சவர்: சுந்தரராஜன்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலவர்: ஆதிகேசவப் பெருமாள், உற்சவர்: சுந்தரராஜன், தாயார்: சௌந்தரவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தியாக சுந்தரராஜன் சேவை சாதிக்கின்றார். சௌந்தரவல்லித் தாயார், பெயருக்கேற்ப அழகே உருவாக தரிசனம் தருகின்றாள்.
தாயார் சந்நிதிக்கும், பெருமாள் சந்நிதிக்கும் இடையே உள்ள சந்நிதியில் நரசிம்ம மூர்த்தியைச் சேவிக்கலாம். ரங்க மண்டபத்தில் ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் சமேத வேணுகோபாலன், சந்தான கோபாலன், நவநீத கிருஷ்ணன், ஹனுமன், நம்மாழ்வார், ராமாநுஜர் ஆகிய மூர்த்திகளைச் சேவிக்கலாம்.
முன்புறமுள்ள விசாலமான தியான மண்டபத்தில், புராண வரலாற்றைச் சித்தரிக்கும் பற்பல சிற்பங்கள் அழகாக உள்ளன. பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயரின் சிற்பம் அற்புதமாக இருக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.