அருள்மிகு வேலாயுதஸ்வாமி திருக்கோவில் (திண்டல்மலை)
God Name : மூலவர்: வேலாயுதஸ்வாமி - உற்சவர்: சுப்ரமண்யர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சீனாபுரம் பகுதியிலிருந்து வந்த கர்ப்பிணி பெண் ஒருத்திக்கு, முதியவள் வடிவில் வந்து பிரசவம் பார்த்த முருகன் என்பதால் சிவபெருமானைப் போலவே தாயுமானவர் நிகழ்ச்சி நடந்தேறிய ஸ்தலம் என போற்றுவர். வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹார சிவசுப்ரமண்ய திரிசதி அர்ச்சனை செய்கின்றனர் (10.30 மணி - 12.30 மணி - 5.30 மணி - 7.30 மணி). எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அரசரடி விநாயகரிடமும், சித்தி விநாயகரிடமும் ஆசி பெற்று, பின் மலை ஏறத் தொடங்குகின்றனர். அரிய பல இயற்கை காட்சிகளும், வற்றாத சுனையும் உள்ள அழகிய மலை. 100 படிகளைக் கொண்டுள்ள அறுபது மீட்டர் உயரமுள்ள மலை. சில படிகளைக் கடந்ததும் இரும்பனை தரிசிக்கலாம். மலைக்கோவிலின் பிரதான கருவறையில் மூலவராக வேலாயுதஸ்வாமி எழுந்தருளி தரிசனம் தருகிறார். கொஞ்சும் சிரிப்புடன் கூடிய அழகிய குழந்தை முகம், கையில் வேலாயுதம் கொண்டு காட்சி தரும் இவரை தரிசித்ததும் மனம் லேசாக பறக்கிறது. அருகே உள்ள சந்நிதியில் உற்சவரான சுப்ரமண்யர் வள்ளி-தெய்வயானை தேவியர்களுடன் தரிசனம் தருகிறார். மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள மஹாகணபதியின் திருவுருவம் அழகாக இருக்கிறது. பழைய மூலவர் சிலை தன்னாசி குகை அருகே மலைச்சரிவிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.