அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயில், பீர்க்கன்கரணை
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் அன்னை சூராத்தம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். வலது காலை மடித்து, இடது காலை பத்மத்தின் மீது வைத்து வீற்றிருக்கின்றாள். சூலம், பாசம், பாணபாத்திரம், அபய ஹஸ்தம் கொண்ட நான்கு திருக்கரங்களுடன் கூடிய அழகான திருமேனி. ராஜ விருட்ச கணபதி, ராம பக்த விநய ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளைக் கொண்டுள்ளனர். சப்த கன்னியர்கள் சிலா வடிவங்களாக கோஷ்டத்தில் காட்சி தருகின்றனர். திரிசூலம் போல் மூன்று கிளைகளையுடைய வேம்பு விருட்சத்தின் அடியில் சுயம்புவாகத் தோன்றிய அன்னை. இதனால் சூலத்தம்மன் எனப் பெயர் கொண்டாள். நாளடைவில் மருவி சூராத்தம்மன் என்றானது. வேப்ப மரத்தின் கீழ் உள்ள ஆதி சக்தி அம்மனின் திருவடியின் கீழே ஸ்ரீ சக்கர ரேகை உள்ள கல் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.