பிரதான கருவறையில் கொங்காலம்மன் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். அஷ்ட புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். சூலாயுதம் தாங்கியிருக்கிறாள். மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. கொங்கு குல அம்மன் என்பதையே கொங்காலம்மன் என குறிப்பிடுகின்றனர்.
கற்பக விநாயகர், சப்த மாதர்கள், நாகர்கள் மற்றும் ப்ரத்யங்கிரா தேவி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். கன்னிமார், பேச்சியம்மன், காட்டேரி, பொம்மி, வெள்ளையம்மாள், மதுரை வீரன், அகோர வீரபத்ரர் மற்றும் கருப்பண்ணசாமி ஆகிய கிராமிய தேவதைகளை தரிசிக்கலாம்.
முன் மண்டபத்தில் பிள்ளையார், அஷ்டலட்சுமி மற்றும் முருகன் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். காயத்ரி தேவி மற்றும் ஆதி கொங்காலம்மன் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.
அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட இரண்டு பெரிய மண் குதிரைகள் வெளியே நிற்கின்றன.
அரசமரம், அத்திமரம், வில்வ மரம், பின்ன மரம் மற்றும் மலங்கிழுவை மரம் ஆகிய ஐந்து பெரிய விருட்சங்களை சுற்றிலும் கொண்டுள்ள ஆலயம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.