அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோவில் (ஈரோடு)
God Name : மூலவராக கஸ்தூரி ரங்கன், உற்சவராக வரதராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
வைகுந்தத்தின் துவாரபாலகர்கள், ஒரு சமயம், முன்கோபக்காரரான துர்வாசரை உள்ளே விட மறுத்தனர். முனிவரின் சாபம் கொண்ட வாயிற்காப்போன்கள், இத்தலம் வந்து, இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு. இருவரும், பரந்தாமன் தாள் பணிந்து மூலஸ்தானமருகே நிற்பதைக் காணலாம். சுகப்பிரசவம் வேண்டி நிற்கும் பெண்கள் பெருமாளுக்கு கஸ்தூரி படைப்பது வழக்கமான ஒன்று. இதனால் பெருமாளுக்கு கஸ்தூரி ரங்கன் என்ற திருநாமம்.
மூலஸ்தானத்தில் மூலவராக கஸ்தூரி ரங்கன் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். பதினான்கடி நீளம் கொண்ட பெரிய திருமேனி. ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. திருவடிகளருகே ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் அமர்ந்துள்ளனர். உற்சவராக வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். சுதையாலான திருமேனி என்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. ஆனி மாதத்தில் தைலக்காப்பு செய்விக்கின்றனர். பெருமாள் சந்நிதியின் பின்புறமாக, கமலவல்லித் தாயார் கிழக்கே திருமக மண்டலம் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பமாக காட்சி தருகிறார். பதினாறு திருக்கரங்களுடன் கூடிய சுதர்ஸன சக்கரத்தாழ்வார், வேணுகோபாலன், ஆண்டாள் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம். இங்குள்ள ஹனுமனுக்கு குங்கிலிய அலங்காரம் விசேஷமானது. நுழைவாசல் மண்டபத்தில் ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிக் கொண்டிருக்கும் சுதை வடிவம் அழகாக இருக்கிறது. காவிரி நதியோரம் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் இவ்வாலயம், ஸ்ரீரங்கம் போல இருப்பது விசேஷமானது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.