அருள்மிகு ஆர்த்தர கபாலீஸ்வரர் திருக்கோவில்

God Name : ஆர்த்தர கபாலீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பிரம்மனின் தலையை, சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க, காளி உடைத்தபோது, அவை நான்கு துண்டுகளாக சிதறி விழுந்தன. பெரிய ஓடு விழுந்த இடம் பேரோடு என்றும், சிறிய ஓடு விழுந்த இடம் சித்தோடு என்றும், வெள்ளைப்பகுதி (மூளை) விழுந்த இடம் வெள்ளோடு என்றும் பெயர்களைக் கொண்டன. சிதறியதால், இறைவன் ஆர்த்தர கபாலீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். ஆர்த்தர என்றால் பாதி (பாதி ஓடு) என்று பொருள். இன்று ஆருத்ர கபாலீஸ்வரர் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. காளியால் தண்டிக்கப்பட்ட பிரம்மன், தனது தவறை உணர்ந்து சிவபெருமானைக் குறித்து தவமிருந்தார். தன்னை மறந்து தவம் புரிந்ததால், இத்தலம் மறந்தை எனவும் பெயர் பெற்றது. கயிலையில் சிவபெருமான் ஓதிய மந்திரத்தை கவனியாது இருந்த பார்வதி, சாபம் கொண்டு மயிலாகப் பிறந்து இத்தலத்தில் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பெரு நல்லாள், சிறு நல்லாள் எனும் இரு தேவ மாதர்கள் இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர். தாண்டவ முதலியார் எனும் சிவநேசச் செல்வர், நெசவுத் தொழில் செய்து கொண்டு, தன்னால் இயன்ற தொண்டுகளை சிவனார்க்குச் செய்து வந்தார். ஒரு நாள், வயதான கிழவர் ஒருவர், தாண்டவ முதலியாரிடம் இரு முழத் துண்டு ஒன்றினை வேண்டிப் பெற்றார். அந்தத் துண்டை நெசவுக் கூலியாகத் தன் முதலாளியிடமிருந்து பெற்று, அதனைக் கிழவருக்குத் தந்தார் தாண்டவ முதலியார். மறுநாள் மூலஸ்தானம் திறக்கப்பட்டபோது, தாண்டவராயரின் இரு முழத் துண்டு இறைவனின் திருமேனியை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் அத்துமீறிப் பிரவேசித்து இச்செய்கையைச் செய்துவிட்டார் தாண்டவ முதலியார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தீர விசாரிக்காமல், அவரை நையப் புடைத்தனர். அப்போது அசரீரி வாக்காக உண்மை வெளிப்பட்டு, தாண்டவராயர் காப்பாற்றப்பட்டார்.
மூலவர்: ஆர்த்தர கபாலீஸ்வரர், அம்பாள்: வாரணியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஆர்த்தர கபாலீஸ்வரர். இவர் சுயம்பு வடிவம். தொண்டீஸ்வர நாயனார், வாரணி பங்காளன் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. மாசி மாதத்து 25, 26, 27 ஆகிய தேதிகளில் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. அழகிய வதனமும், சதுர்புஜங்களும் கொண்ட நான்கடி உயரமுள்ள அழகிய திருமேனியுடன் காட்சி தரும் வாரணியம்மை மிகுந்த வரப்பிரசாதி. குஜமஸ்த குணமஸ்தனி என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. குஜமஸ்த குணமஸ்தனி என்றால் தர்ப்பையிலான கச்சையை அணிந்தவள் என்று பொருள். ஜ்வரஹரேஸ்வரர், 108 சிவலிங்கங்கள், பைரவர், ருத்ரகோடீஸ்வரர் எனப்படும் 1008 லிங்கங்கள், சித்தி விநாயகர், சூரிய - சந்திரர்கள், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். அறுபத்திமூவர் திருவுருவங்களுக்கு மேல் அவர்களது குலம், பிறந்த காலம், பிறந்த ஊர், பிறந்த நட்சத்திரம் போன்ற குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பஞ்சபூத ஸ்தலங்களைச் சேர்ந்த லிங்கங்கள், அப்பதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள், காளத்தி, திருவண்ணாமலை ஆகிய ஸ்தல புராணங்களை விளக்கும் வண்ணச் சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. பேரம்பலம் மற்றும் சிற்றம்பலத்துத் தூண்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் யாவும் அற்புதமாக உள்ளன. எதிரும் புதிருமாக காணப்படும் ஊர்த்துவ தாண்டவர் - ஆலங்காட்டு காளி சிற்பங்கள் எழிலானவை. சிவநேசச் செல்வியர் என பெண்கள் உரிமை பெற்ற ஸ்தலம் இது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.