அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவில் (சென்னிமலை)

God Name : சென்னிமலைநாதர் எனப்படும் சிரகிரி தண்டாயுதபாணி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஸ்தல புராணம்: ஒரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் நடந்த பலப்பரிட்சையில், மாமேருவை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கொண்டான். அதனை அவனது பிடியிலிருந்து விடுவிக்கும் போட்டியில் வாயுதேவன், பலமாக காற்றை வீசி, மாமேருவின் சிகரத்தை அசைத்துப் பறக்கடித்தான். அந்த சிகரத்தில் ஒன்று வந்து விழுந்த இடமே சிரகிரி மலை எனப்படும் சென்னிமலை. பஞ்சம் பிழைக்க இவ்வூருக்கு வந்த செங்கத்துறையான் என்பவன், பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்து மாடு மேய்ப்பதை அன்றாடம் செய்து வந்தான். ஒரு நாள் மலை மீது மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, "எனக்குப் பசிக்கிறது... நான்தான் சென்னியாண்டவன்" என அசரீரியாக ஒலித்தது. காராம்பசுவின் பாலைக் கறந்து, "இந்தா, இதைக் குடித்துப் பசியாற்றிக்கொள்" என்றான் செங்கத்துறையான். இந்த செயல் அன்றாடம் நிகழ்ந்தது. "தினமும் நான் உனக்குப் பால் தருகிறேன்... நீ என் கண்ணுக்குத் தெரிவதில்லையே" என அங்கலாய்த்தான் செங்கத்துறையான். பெரிய ஒளிப் பிழம்பாக தோன்றி அவனுக்குக் காட்சி தந்தார் சென்னியாண்டவர். அவர் காட்சி தந்த இடத்தில் அவருக்குக் கோயில் கட்ட ஆசைப்பட்டான் செங்கத்துறையான். மக்களிடம் நிதி திரட்டி கோயில் கட்ட தயாரானான். இவ்வூர் அருகேயுள்ள ஒட்டப்பாறை எனுமிடத்திலுள்ள குன்றின் மீது இடி விழுந்து பிளவுபட்டு, செங்கத்துறையான் கட்டும் கோயிலுக்குப் பாறைகளாகின. இவ்வாறாக பணமும், பொருளும் சேர்த்து மலை மீது கோயில் எழுப்பினான். இவனை மக்கள் நிலத்தம்பிரான் என்று அழைத்தனர். மலையடிவாரத்து கைலாசநாதர் கோயிலுக்குக் கதவுகள் செய்து போட்டு மகிழ்ந்தான் செங்கத்துறையான். சோழமன்னன் ஒருவன் தன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட வேண்டி இத்தலத்திற்கு வந்தான். அர்ச்சகர் யாரும் அப்போது இல்லாததால், சகுனத் தடையாகக் கருதி மனம் வருந்தினான். முருகனே அர்ச்சகராக வந்து பூஜை செய்து, அவனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார் என ஸ்தல வரலாறு. அருணகிரிநாதருக்குப் படிக்காசு தந்தருளிய ஸ்தலம். கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்.
மலையடிவாரம்: அடிவாரத்திலுள்ள சிவாலயத்தில் கைலாசநாதரையும், பெரியநாயகியையும் தரிசிக்கலாம். செங்கத்துறை பூசாரி மடம் ஒன்றும் உள்ளது. நிலத்தம்பிரானின் சமாதிக்கோயில் இருக்கிறது. சமாதிக்கு மேல் முருகப் பெருமானின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். நிலத்தம்பிரானின் சிலை ஒன்றும் உள்ளது. மலையின் வடப்பக்கமாக சரவணப் பொய்கை அமைந்துள்ளது. மலை ஏறும் வழி: மலை ஏறும் வழியில் கோயில் கொண்டுள்ள மலைவழி விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று, பின்னர் இடும்பனை தரிசித்து மலை ஏறத் தொடங்குகின்றனர். மலை: (தென் சென்னிமலை) 1320 படிக்கட்டுகளைக் கொண்ட ஏறும் வழியும், 4 கி.மீ. பயணமாக காரில் செல்லும் பாதையும் அமைத்துள்ளனர். தொடர்ச்சியாகவும், அடுக்கடுக்காகவும் அமைந்து சிறிது சிறிதாக உயர்ந்து செல்லும் மலை. படிக்கட்டுப் பாதையில் இளைப்பாறும் மண்டபங்கள் உள்ளன. மலைக்கோயில்: மலைக்கோயிலின் முன்புறமாக பரந்த வெளியும், கருடகம்பமும், மண்டபங்களும் உள்ளன. மூலஸ்தானத்தில் சென்னிமலைநாதர் எனப் போற்றப்படும் முருகப் பெருமான் மூலவராக எழுந்தருளியுள்ளார். இவருக்கு சிரகிரி தண்டாயுதபாணி என்ற பெயரும் உண்டு. கோஷ்டத்தில் அக்னிஜாத சுப்ரமண்யர், சௌரபேய சுப்ரமண்யர், தேவ சேனாதிபதி, சரவணபவன் ஆகிய அரிய சிற்பங்களை கண்டு மகிழலாம். மூலஸ்தானத்திற்கருகே மார்க்கண்டேஸ்வரரையும், இமயவல்லியையும் தரிசிக்கலாம். சுற்றுப் பிரகாரத்தில் விசாலாட்சி உடனாய விஸ்வநாதர் சந்நிதி கொண்டுள்ளார். சற்று தொலைவில் வள்ளி - தெய்வயானை தேவியர்கள் தனிக்கோயில் கொண்டுள்ளனர். அகஸ்தியர் நிர்மாணித்த லிங்கத்தை தரிசிக்கலாம். புண்ணாக்கு சித்தரின் குகை இருக்கிறது. மலையின் தென்மேற்கு சரிவில் மாமாங்க தீர்த்தச் சுனையும், குமார தீர்த்தம் எனப்படும் சுப்ரமண்ய தீர்த்தமும் இடம் பெற்றுள்ளன. இரண்டு எருதுகள் தெப்பக்குளத்திலிருந்து திருமஞ்சன நீர் எடுத்துக் கொண்டு மலை ஏறிச் சென்று முருகனுக்குத் தருவதை தினமும் காலை 6 மணி அளவில் பார்க்கலாம். ஆணிகளடித்த பாதக்குறட்டின் மீது நின்றுகொண்டு, பூசாரி அருள்வாக்கு தருகின்றார். குறிப்பு: சேலம் - கடலூர் ரயில் பாதையிலுள்ள காட்டுக்கோட்டை ரயில் நிலையத்து அருகே வடசென்னிமலை முருகன் கோயில் இருக்கிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.