அருள்மிகு எல்க் ஹில் முருகன் திருக்கோவில்
God Name : மூலவர்: முருகப் பெருமான், உற்சவர்: பாலமுருகன்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
108 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நாற்பதடி உயர அழகிய சுதைச்சிற்பமாக நெடிந்துயர்ந்த முருகனைக் காணலாம். இது மலேசியாவிலுள்ள பத்துமலை முருகனைப் போலவே அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளி அருள் பாலிக்கும் முருகப் பெருமானின் அழகை வர்ணிக்க இயலாது. அவர் சந்தனக் காப்பில் மிளிர்கிறார். உற்சவராக பாலமுருகன் காட்சி தருகிறார். இங்கு ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஜலகண்டேஸ்வரியையும் தரிசிக்கலாம். சுதை சிற்பமாக சிவபெருமானின் தோற்றம் அழகாக இருக்கிறது. அஷ்டபுஜ துர்க்கைக்கும் சன்னதி உள்ளது. கணபதி, சக்தி, நவகன்னிகைகள் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
குறிப்பு: நான்கு சக்கர வாகனங்கள் செல்ல பாதை உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஏறுவதற்கு சிரமப்படும் செங்குத்தான பாதை இது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.