அருள்மிகு அன்னமலை அழகன் திருக்கோவில் (அன்னமலை - குந்தா)
God Name : தண்டாயுதபாணி சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் அழகு திருவுருவமாக எழுந்தருளி தரிசனம் தருபவர் தண்டாயுதபாணி சுவாமி. இவரை 'அன்னமலை அழகன்' என்று கொண்டாடுகின்றனர். தட்டைப்பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள விநாயகரின் திருவுருவமும் அவரது வாகனமான மூஞ்சூரும் அவசியம் தரிசிக்க வேண்டியவை. அவை அவ்வளவு அழகாக இருக்கின்றன. முருகப்பெருமானின் திருவடிகளையும் தரிசிக்கலாம். நவக்கிரக மண்டபமும் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரம் கொண்ட மலை மீது கோவில் கொண்டுள்ளார். இம்மலையைச் சுற்றியுள்ள ஊர் மக்களுக்கும் படகர் இனத்தவருக்கும் கண்கண்ட தெய்வமாக இருந்து அருள் புரிகின்றார். முற்காலத்தில் 'அறைபெட்டு' என்றழைக்கப்பட்டு தற்போது 'அன்னமலை' எனப்படுகிறதாம். கிருஷ்ணாநந்தா எனும் குருசாமி இவ்வாலயத்தை ஸ்தாபித்து நித்திய பூஜைகள் செய்து வந்தார் என குறிப்பொன்று கூறுகிறது. காவடி பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 'அன்னமலை' என்ற பெயருக்கேற்றார் போல் அன்னதானம் செய்கின்றனர். கீழ்க்குந்தாவிலுள்ள (மஞ்சகொம்பை - மனிஹட்டா) ஹெத்தையம்மன் கோவிலில் நாகராஜர், ஹெத்தையம்மன், சந்தானலட்சுமி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மே மாதம் 1, 2 தேதிகளில் பூக்குண்ட விழா சிறப்புற நடக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.