அருள்மிகு வெங்கடாஜலபதி (பாலாஜி) திருக்கோவில் (வால்பாறை)
God Name : வெங்கடாஜலபதி பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளி அருள் புரிகின்றார். நான்கடி உயரம் கொண்ட அழகான திருமேனி. அருகே எழுந்தருளி தரிசனம் தரும் உற்சவ மூர்த்தியும் எழிலான திருமேனி. திருப்பதியில் இருப்பது போலவே அசாத்திய சாந்நியத்துடன் சேவை சாதிக்கிறார் பெருமாள். அலர்மேல்மங்கை தாயார் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். வெள்ளிக் கவசம் அணிவித்துள்ளனர். ஆஞ்சநேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார். சிறுசிறு மலைகளால் சூழப்பட்ட அழகிய வனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயம். சலவைக்கற்களால் கட்டப்பட்ட அழகிய கோவில். கோவில் கோபுரத்தின் முகப்பில் தோள்களில் ராம-லக்ஷ்மணர்களை சுமந்தபடி இருக்கும் ஆஞ்சநேயரின் சிற்பம் மிக அழகாக இருக்கிறது. பெரிய காரமலை தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தமானது. ஒரு வெள்ளிக் குச்சியில் குங்குமப் பிரசாதம் நீட்டுவார்கள். வலது கை மோதிர விரலால் எடுத்து இட்டுக் கொள்ள வேண்டும். வலது கையில் வாங்கி இடது கையில் போட்டுக் கொள்ளும் பழக்கத்தைத் தவிர்க்கவே இவ்வழியைப் பின்பற்றுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.