அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில் (நந்தம்பாக்கம்)

God Name : ஸ்ரீ கோதண்டராமர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இத்தலத்தின் அருகேயுள்ள மலையில் அமர்ந்து ப்ருங்கி முனிவர் நீண்ட தவம் மேற்கொண்டார். அதன் காரணமாக அந்த மலைக்கு ப்ருங்கி மலை எனப் பெயர் வந்தது. (தற்போது பரங்கிமலை எனப்படுகிறது) இந்த மலையை ஒட்டி முனிவரால் அமைக்கப்பட்ட நந்தவனம், நந்தவன பக்கம் எனப் பெயருற்று, நாளடைவில் மருவி நந்தம்பாக்கம் என்றானது. ஸ்ரீராமர் இலங்கை போகும் வழியில், இத்தலத்திற்கு வந்து, இங்கு தவம் செய்து கொண்டிருந்த ப்ருங்கி முனிவரை வணங்கிச் சென்றார் என்றும், முனிவர் வேண்டிக் கொண்டதன் பேரில் இங்கு சிறிது காலம் தங்கியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகின்றது. இதை நினைவூட்டும் வகையில் அருகிலுள்ள ஊர்களின் பெயர்கள் - ராமாவரம், லக்ஷ்மணபுரம், சீதாபுரம் (தற்போது தேவிகுப்பம்), ஹனுமந்தபுரம், லட்சுமிபுரம் என ராமாயணப் பின்னணியோடு அமைந்த பெயர்களாக உள்ளன. ஸ்ரீராமர் தங்கிய இப்பகுதியில் ராமருக்கு ஆலயம் கட்டியவர் திருக்கச்சி நம்பிகள் (1180 ஆம் ஆண்டு). பிற்காலத்தில் கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியான சஞ்சீவராயர் திருப்பணிகள் செய்துள்ளார். சென்னையிலுள்ள ராமர் கோவில்களிலேயே பழமையான கோவில் என்று கூறுவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வருடத்திற்கு ஒரு நாள், இக் காட்டில் தங்கல் எனும்படி சம்பிரதாயம். தற்போது இல்லை. இதுவே பிரிட்டிஷ் காலத்தில், ப்ருங்கி மலை மீது தேவாலயங்கள் நிறுவப்பட்டு செயின்ட் தாமஸ் மௌன்ட் என்றும் பரங்கிமலை என்றும் பெயரிட்டனர் என குறிப்பொன்று கூறுகின்றது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கோதண்டராமர் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு, பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவரது மடியில் சீதா தேவி அமர்ந்துள்ளார். லக்ஷ்மணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் உடன் உள்ளனர். அனைவரும் தெற்கு பார்த்திருக்க ஆஞ்சநேய ஸ்வாமி வடக்கு பார்த்து அதாவது ஸ்வாமியை நோக்கியபடி உள்ளார். அலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீநிவாசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். ஏழடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் காணப்படும் ஆனந்த ஆஞ்சநேயரை சேவிக்க ஆனந்தம் பெருகுகிறது. தனித்தனி சந்நிதிகளில் கோவில் கொண்டுள்ள நந்தவனக் கண்ணன், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகியோரை சேவிக்கலாம். வசந்த மண்டபத்தில் அணையா விளக்கும் அதைச் சுற்றி 288 நெய் விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. ஸ்ரீராமநவமி உற்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.