அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோவில் (இடுகம்பாளையம்)
God Name : ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
குன்று போல் தோற்றமளிக்கும் பெரிய பாறை ஒன்றில் சுயம்புவாகத் தோன்றிய வடிவங்கள். ஐந்தரை அடி உயரம் கொண்ட அழகிய திருவுருவமாக ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். 'அஞ்சேல்' என அருள் பாலிக்கும் வலது கரம் உயர்த்தி நின்ற திருக்கோலம். முழங்காலில் ஊன்றி சௌகந்திக மலரைத் தாங்கிய இடது கரம், தலைக்குப் பின்புறமாக மணியொடு கூடி நிமிர்ந்து நிற்கும் வால், கருணை ததும்பும் விழிகள், பிரகாசமான திருமுகம் கொண்டு காட்சி தருகின்றார்.
பின்புறமாக சுயம்பு லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயரின் வலது புறமாக சுயம்பு வடிவ விநாயகப் பெருமானும், நந்தியம் பெருமானும் இடம் பெற்றுள்ளனர். காமதேனு லிங்கத்தின் மீது பால் சொரியும் சிற்பம் அழகாகக் காட்சியளிக்கிறது. நிலத்திலிருந்து எழும்பியுள்ள பாறையில் சிவலிங்கத் திருமேனி உள்ளது. அந்தத் திருமேனியில் சூரிய-சந்திரர்கள், பிள்ளையார், காமதேனு, ஆதிசேஷன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராம நவமி, ஹனுமத் ஜெயந்தி விழாக்களும், சனிக்கிழமைகளில் விசேஷ ஆராதனைகளும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் முறை வைத்து ஊர் மக்கள் கோவிலுக்குக் கைங்கர்யம் செய்கின்றனர். காலையில் 5.00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், இரவு 8.45 மணிக்கு ஏகாந்த சேவையும் கிடைக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.