அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் (இருகூர்)
God Name : ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சௌந்தரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
கரிகால சோழன் இவ்விறைவனை வழிபட்டு தனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் வழிபட்டதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது.
காமதேனுப் பசு லிங்கத்தை வழிபாடு செய்துள்ளதாக ஸ்தல புராணம் மேலும் தெரிவிக்கின்றது.
இருளர்களின் தலைவனான இருவன் என்பவன் பெயரில் இருகூர் என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். திருமேனியின் மத்தியில் ஒரு குழியும், வலப்பக்கத்தில் ஒரு தேய்வும் காணப்படுகிறது. பின்புறமாக குடுமி காணப்படுகிறது. சித்திரை, புரட்டாசி மாதங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து மேலும் ஒளி சேர்க்கின்றன.
ஸ்வாமிக்கு இடதுபுறமாக சுயம்வர பார்வதி தேவி மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். வலதுறத்தில் ஞான தண்டபாணி தண்டத்துடன் காட்சி தருகிறார். இவரும் மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார்.
மற்றொரு லிங்க வடிவமான ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேன் வண்ணத்தில் காட்சி தரும் அழகிய பாணலிங்கம். ஸ்ரீ மீனாட்சி தேவி மற்றும் வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களும் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளனர்.
ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ மார்க்கண்டேஸ்வரர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.