அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் (சூலக்கல்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
வேலாயுதம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவரின் பசுமாடு, இவ்வூரருகே மேய்ந்து கொண்டிருந்தபோது பூமியில் புதையுண்டிருந்த சுயம்பு மாரியம்மனின் மீது பாலைப் பொழிந்தது. மாரியம்மன் குடியிருப்பதை கண்டுபிடித்த ஊர் மக்கள், இந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். 15 அடி ஆழத்திற்கு தோண்டியும் சுயம்பு அன்னை கீழ் நோக்கி போய்க் கொண்டே இருந்ததாம். தோண்டுவதை விட்டுவிட்டு அங்கேயே கோவில் எழுப்பினார்கள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சூலம் ஏந்தி சுயம்புவாக கல்லில் தோன்றியதால் சூலக்கல் மாரியம்மன் என்ற பெயர் கொண்டாள்.
மூலஸ்தானத்தில் அருளாட்சி செய்யும் மாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. வடக்கு நோக்கி தரிசனம் தருகிறாள். அம்மனுக்கு அருகே சூலாயுதமும் சிவலிங்கமும் காட்சி அளிக்கின்றன. ஒரு முறை தரிசித்தவர்களை மீண்டும் வரவழைத்து அன்பு செலுத்துபவள் அன்னை. இவளை தரிசிப்பவர்களுக்கு, கண் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உடனே நிவாரணம் கிடைக்கிறது. அன்னையின் விபூதியும் தீர்த்தமும் அம்மை - வெம்மை நோய்களிலிருந்து விடுபட வைக்கிறது. திருஷ்டி, பில்லி சூன்யம் போன்றவற்றிலிருந்தும் விடுபட வைக்கிறது. வைகாசி திங்களில் நடக்கும் தேர்திருவிழா பிரசித்தமானது. இது 3 நாட்களுக்கு நடக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.