அருள்மிகு பொன்மலை வேலாயுதஸ்வாமி திருக்கோவில் (கிணத்துக்கடவு)

God Name : மூலவர்: வேலாயுதஸ்வாமி் உற்சவர்: பொன் வேலாயுதஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

முன்நாளில் பொன் கிடைத்த இடம் என்பதனால் பொன்மலை என்ற பெயரைக் கொண்டது. கனககிரி என்றும் அழைப்பார்கள். இங்கு சந்தன மரங்கள் அதிகம். குழந்தைப் பருவத்தில் இங்கு குடி கொண்ட முருகனின் பாதச்சுவடுகள் இந்தக் குன்றின் மீது பதிந்திருப்பதை, முருகதாஸ முருக பக்தரான புரவிப்பாளைய ஜமீன்தாரின் கனவில் தோன்றி முருகன் தெரியப்படுத்தினார். பாதச்சுவடுகள் இருக்கும் பீடத்திற்கே பிரதான பூஜைகள் செய்கின்றனர். இது பாம்பாட்டி சித்தர் தொடர்புடைய ஸ்தலம் என்பர்.
பாறைகளிலேயே செதுக்கப்பட்ட 200 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலை ஏறும் வழியில் இடும்பனை தரிசித்துச் செல்கின்றனர். மூலஸ்தானத்தில் மூலவராக வேலாயுதஸ்வாமி எழுந்தருளியுள்ளார். நான்கடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். வலது கரத்தில் தண்டம் ஏந்தி, இடது கரம் இடுப்பில் வைத்து நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். ருத்ராட்சம் சுற்றி சூரிய-சந்திரர்கள் சூடிய திருமுடியுடன் காணப்படுகிறார். மிகுந்த வரப்பிரசாதி. கிழக்கு பார்த்த சந்நிதி. வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் உற்சவ மூர்த்தி பொன் வேலாயுதஸ்வாமி தரிசனம் தருகின்றார். தாரணி பணியும் வாரண முகவர் (விநாயகர்) ஸ்தல விநாயகராக எழுந்தருளி ஆசி வழங்குகிறார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.