அருள்மிகு ஸ்ரீ மஹாலட்சுமி திருக்கோவில் (ஈச்சநாரி)

God Name : ஸ்ரீ மஹாலட்சுமி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஆலயத்தின் முன்பாக அழகிய துளசிமாடம். கருடத்வஜ கவசமிட்டு கம்பீரமாக நிற்கும் வேத மண்டபம் அடுத்துள்ளது. நான்கு மறைகளை உணர்த்தும் வேத மண்டபம் என்பர். மூலஸ்தானத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். வலது பக்கமாக துர்க்கையும், இடது பக்கமாக சரஸ்வதியும் எழுந்தருளியுள்ளனர். அழகான உற்சவத் திருமேனிகளையும் தரிசிக்கலாம். முப்பெருந் தேவியரும் கிழக்கு நோக்கி தரிசனம் தருவது சிறப்பான அமைப்பு என்பர். மஹாலட்சுமியின் முன்பாக ஸ்ரீ சக்கர மேரு அமைப்பு காணப்படுகின்றது. தினமும் மேருவிற்கு குங்கும அர்ச்சனை செய்து அதையே பிரசாதமாக தருகின்றனர். நித்ய சஹஸ்ரநாம வழிபாடும் நடக்கின்றது. கொடிமரத்து சாளரம் வழியே தினமும் காலை (7.30 மணி - 8.00 மணி) ஸ்ரீ மஹாலட்சுமியின் மீது சூரிய ஒளி படர்ந்து பிரகாசமடையச் செய்து சூரிய பூஜை செய்கிறது. 12.00 மணி அளவில் மூன்று தேவியர்களின் மீதும் ஒளி படர்ந்து பூஜிக்கின்றது. கோவிலின் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் தேவியர்கள் நம்மை பார்ப்பது போன்றே இருக்கின்றது. உயரமான பீடத்தில் தேவியர்கள் எழுந்தருளியிருப்பதால் தெருவிலிருந்தே பார்த்தாலும் தரிசனம் கிடைக்கிறது. பிரகார வலச்சுற்றில் விநாயகர், சயனக்கோலம் கொண்ட அனந்தபத்மநாபர் ஸ்ரீ தேவி மற்றும் பிரம்மா சஹிதம் காட்சிதருகின்றனர். ஏழரை அடி உயரம் கொண்ட நெடிய திருமேனியுடன் ஆஞ்சநேயஸ்வாமி எழுந்தருளி தரிசனம் தருகிறார். சித்திரை மாதம் முதல் நாள் மூலஸ்தானத்திற்குள் தண்ணீர் நிரப்பி, தாமரை மலர்களை மிதக்கவிட்டு, தாமரை தடாகத்தில் மஹாலட்சுமி இருப்பது போல் சிறப்பு ஏற்பாடுகளை செய்வார்கள். ஆடி மாத சாகம்பரி அலங்காரம் பிரசித்தம். மூன்று வாரம் மலர்களாலும், நான்காம் வாரம் காய்களாலும், ஐந்தாம் வாரம் கனிகளாலும் அலங்காரம் செய்வார்கள். நவராத்திரி ஒன்பது நாளும் கொலு. ஸ்ரீ வரலட்சுமி விரதம், விஜயதசமி ஆகிய தினங்களில் விசேஷ அலங்கார ஆராதனைகள் நடைபெறும். வரலட்சுமி விரத நாளன்று நோன்பு அனுசரித்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர். திருமாங்கல்ய சரடை மூன்று தேவியர்களின் பாதங்களில் வைத்து பூஜித்து, இங்கு வரும் பெண்களுக்கு விநியோகம் செய்கின்றனர். தனி நபர் அர்ச்சனை செய்யப்படுவதில்லை. சகல ஜீவராசிகள் மற்றும் உலக நன்மைக்காக பொது சங்கல்பம் செய்து பூக்களாலும், குங்குமத்தாலும் அர்ச்சிக்கின்றனர். பிரசாதம் விற்கப்படுவதில்லை. கடைகள் கிடையாது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.