அருள்மிகு ஈச்சநாரி விநாயகப் பெருமான் திருக்கோவில்

God Name : விநாயகப் பெருமான்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஸ்தல வரலாறு: பேரூரில் பிரதிஷ்டை செய்வதற்காக, மிகப் பெரிய விநாயகரின் திருவுருவத்தை ஏற்றிக்கொண்டு மதுரையிலிருந்து வந்த மாட்டு வண்டி, இவ்வூரைக் கடக்கும்போது, வண்டியின் அச்சு முறிந்து, விநாயகரின் சிலை இங்கேயே நிலை கொண்டது. வண்டியை சரி செய்த பின்னர், இவரை திரும்ப எடுக்க பலவிதமான முயற்சிகள் செய்தனர். முடியாமல் தோல்வியுற்றனர். விநாயகர் இங்கேயே கோவில் கொள்ள திருவுள்ளம் கொண்டார் போலும் என மகிழ்ந்து, இங்கேயே பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமான் மிகுந்த வரப்பிரசாதி. ஆறடி உயரமும் மூன்றடி பருமனும் கொண்ட ஆஜானுபாகுவான பெரிய திருமேனி. வலது கால் பாதம் பீடத்திலும், இடது கால் பாதம் நம்மை நோக்கியும் உள்ளது. கிழக்கு பார்த்த மூலஸ்தானம். கழுத்தில் ருத்ராட்ச மாலை, வலது கையில் ஒடிந்த தந்தம், இடது கையில் மோதகம், இடுப்பில் பாம்பு ஒட்டியாணம் ஆகியன கொண்ட அழகான தோற்றம். கண்கள், மகுடம், திருவாசி ஆகியவை வெள்ளியினால் செய்யப்பட்டவை. தெருவிலிருந்து பார்த்தாலே தரிசிக்கும் விதமான அமைப்பு. முன் மண்டபத்தின் விதானத்தில் 12 ராசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் தென்புறச் சுவரில் பன்னிரெண்டும், வடபுறச் சுவரில் பன்னிரெண்டுமாக பெரிய ஓவியங்கள் விநாயகப் பெருமானின் திருவிளையாடல்களை விளக்குகின்றன. பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் என ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஒரு எழிற்கோலம் காட்டுகிறார். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திர நாட்களிலும் விதவிதமாக அலங்காரம் செய்கின்றனர். இங்குள்ள நந்தவனத்து மலர்கள் விநாயகரை அலங்கரிக்கின்றன. தனி ஹோம மண்டபம் உள்ளது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு உபயதாரர்களுக்காக கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது. தினசரி இரவு 7.00 மணிக்கு தங்கத்தேர் பவனி (கோவிலுக்குள் உலா) நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை தினங்களில் மாலை 7.00 மணிக்கு வீதிவுலா நடைபெறும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.