அருள்மிகு ஸ்ரீ நந்தீஸ்வரர் திருக் கோவில் (ஆதம்பாக்கம்)
God Name : ஸ்ரீ நந்தீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ப்ருங்கி முனிவருக்கு இத்தலத்தில் சிவபெருமான் நந்தி ரூபத்தில் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் இவ்விறைவன் நந்தீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். இதனருகே உள்ள மலையில் ப்ருங்கி முனிவர் தவம் இருந்துள்ளார். பின்னர் ஆங்கிலேயர்களால் அது பரங்கிமலை என மாற்றம் செய்யப்பட்டது. ஆதணி எனும் சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் உள்ள பகுதி ஆதணிப்பாக்கம் எனப் பெயர் கொண்டு நாளடைவில் மருவி ஆதம்பாக்கம் என்றானது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ நந்தீஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஆவுடைநாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வடமொழியில் கோமதி என அழைப்பர். நுழைவாசலில் நாகலிங்கம் தரிசிக்கலாம். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. சுந்தர விநாயகர், துர்க்கை, நாக தேவதைகள், தட்சிணாமூர்த்தி, பைரவர், விஷ்ணு, நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிரதோஷ தினத்தன்று ஒரு பசுமாடு, கோயிலை வலம் வருவது தொடரும் அதிசய நிகழ்ச்சியாக உள்ளது. எல்லா சோம வாரமும் ருத்ர திரிஸதி அர்ச்சனை செய்கின்றார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.