அருள்மிகு மருதாசலமூர்த்தி திருக்கோயில் (மருதமலை)

God Name : மருதாசலமூர்த்தி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மலையடிவாரம்: அடிவாரத்து முன்மண்டபத்தின் தென் கிழக்காக, வள்ளியம்மன் திண்டு என அழைக்கப்படும் வள்ளி அம்மன் ஆலயம் உள்ளது. அதில் வள்ளியம்மை கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகின்றாள். படிக்கட்டுகள் தொடங்குமிடத்தில் முருகனின் மயில் வாகனம் சிலா வடிவத்தில் அழகாகக் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்தைக் கடந்ததும், ஒரு பாறை மீது எழுந்தருளியுள்ள தான்தோன்றி விநாயகர் மேற்கு பார்த்து தரிசனம் தருகின்றார். சுயம்பு வடிவினர். இவரை வணங்கி ஆசி பெற்று மலை ஏறுவதைத் தொடங்குகின்றனர். பின்னர் பதினெட்டாம் படிகளைத் தரிசித்து, அவற்றைக் கடந்து சென்றால் நேர் வடகிழக்காக மூன்று கற்களைக் காணலாம். இந்தக் கற்கள் மலையின் நிறத்திலிருந்து மாறுபட்டு இருக்கும். உண்டியலைக் களவாட வந்த மூன்று திருடர்களை, குதிரை வீரனாக வந்த முருகன், கற்சிலைகளாக மாற்றினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. வழியில் இளைப்பாற புளியமரத்து மேடை உள்ளது. இந்த மேடையில் அமர்ந்து குறி சொன்னால் பலிக்கும் எனக் கூறுகின்றனர். சற்றுத் தள்ளியுள்ள கோவிலில் இடும்பன் தரிசனம் தருகின்றார். காவடி சுமக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். முருகனின் பூரண அருள் பெற்றவர் இடும்பன். இவரிடம் பக்தர்கள் தங்களது கை - கால் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பிரார்த்திக்கின்றனர். அடுத்துள்ள எழில் மண்டபத்தில் குதிரைக் குளம்பு எனும் சுவட்டைத் தரிசிக்கலாம். சூரனை வெல்ல முருகன் குதிரையில் புறப்பட்டபோது, குதிரையின் குளம்பு பதிந்ததால் ஏற்பட்ட சுவடுகள் அவை. ஆதி மூலஸ்தானம் எனப்படும் சந்நிதியை, படிகள் ஏறி மலையை அடைந்ததும் காணலாம். இதில் அருவுருவத் திருமேனிகளாக மூன்று கற்கள் வடிவில் வள்ளி - தெய்வயானை சகித சுப்ரமண்யர் காட்சி தருகின்றனர். ஆதியில் பாம்பாட்டி சித்தர் வழிபட்ட மூர்த்திகள் என்பர். வெளியே அரசமரத்து மேடையிலுள்ள பிரம்மாண்டமான விருட்சம் ஐந்து மரங்கள் சேர்ந்ததாகும். இதில் அரசு - ஆல் - வேம்பு - வக்கணை - நுணா ஆகியன ஒன்றாக உள்ளன. பஞ்ச பூத விருட்சம் என அழைக்கின்றனர். இதில் விநாயகப் பெருமான் நாக பிரதிஷ்டைகளுடன் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் ஐந்து முறை சுற்றி வருகின்றனர். மூலஸ்தானத்தில் மூலவராக மருதாசலமூர்த்தி, சிரசில் கண்டிகையும் பின்பக்கமாகக் குடுமியும் கொண்டு காட்சி தருகின்றார். வலது கரத்தில் ஞானத்தண்டம் ஏந்தி, இடது கரத்தை இடுப்பில் வைத்து, கோவணம் தரித்து பால ரூபத்துடன் ஞானக் கொழுந்தாகக் காட்சி தருகின்றார். இவரின் சௌந்தர்ய தோற்றம் கண்களையும் மனதையும் விட்டகலாது. தினமும் ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக் காப்பு என மூன்று வித அலங்காரங்கள் செய்கின்றனர். இடதுபுறமாக தண்டாயுதபாணி, சுப்ரமண்யர், வள்ளி, தெய்வயானை, சூலேசுவரர், வீரபாகு ஆகியோரின் உற்சவ மூர்த்திகளும், பாம்பாட்டி சித்தரின் பாதரட்சைகளும் காணலாம். வலதுபுறமாக விநாயகர், சிவலிங்கம், சூலதேவர், பைரவர் ஆகிய மூர்த்தங்களைக் காணலாம். உட்பிரகாரத்தில் பட்டீஸ்வரர் சந்நிதி கொண்டுள்ளார். இடதுபுறமாக மரகதாம்பிகை சந்நிதி கொண்டுள்ளார். அடுத்து நவகிரக நாயகர்கள். இடதுபுறமாக உள்ள சிறிய கோவில் ஒன்றில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பின்புறமாக உள்ள பாதையிலிறங்கி மேற்கே வந்தால் ஸ்தல விருட்சமான மருதமரத்தைக் காணலாம். மருத தீர்த்தம் மற்றும் கன்னிமார் சந்நிதி காணலாம். கன்னிமார் சந்நிதியிலிருந்து கிழக்கே போகும் படிகள் வழியே சென்றால் பாம்பாட்டி சித்தர் சமாதியை அடையலாம். வயது முதிர்ந்த பாம்பு ஒன்று தினமும் வந்து பால், பழம் சாப்பிடுகிறதாம். பாம்பு படம் எடுத்தது போல் இயற்கையாகவே அமைந்த பாறை அங்கே உள்ளது. இங்கே தியானம் செய்பவர்கள் அதிர்வுகளைப் பெறுவர். இவரை வழிபடுபவர்கள் எதிலும் பூரணத்துவம் பெறுவர். விஸ்வரூப தரிசனம்: காலை 6.00 மணி, காலை சந்தி 9.00 மணி, உச்சிக்காலம் 12.00 மணி, சாயரட்சை 5.00 மணி, அர்த்த ஜாமம் 8.30 மணி. (அர்த்தஜாம பூஜையின்போது அணிகலன்கள் ஏதுமின்றி வேட்டி அணிந்தபடி தண்டபாணியாக தரிசனம் தருகின்றார்)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.