அருள்மிகு ஈஷா தியான லிங்கம் கோவில் (வெள்ளியங்கிரி, கோவை)

God Name : தியான லிங்கம்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஒரு முறை தரிசித்தவர் மனதிலிருந்து நீங்காமல் இருக்கும் தியானலிங்கம். தரிசிப்போர்க்கு ஆற்றலையும், அதிர்வினையும் தரத்தக்கது. இது ஆன்மீக அறிவியலை வழங்கும் மையம். தினமும் முற்பகல் 11.50 முதல் 12.10 வரையிலும், மாலை 5.50 முதல் 6.10 வரையிலும் நாத ஆராதனை நடத்துகின்றனர். இது தியான லிங்கத்தின் அதிர்வுகளை நாம் பெறுவதற்கு உதவும் ஆராதனை ஆகும். மதியம் 12.30 மணி முதல் பகல் 1.15 மணி வரை ஓங்கார தீட்சை எனும் தியான பயிற்சி, விருப்பமுள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அமாவாசை, பௌர்ணமி, மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி நாட்களில் விசேஷ ஆராதனைகள் சிறப்புற நடைபெறுகின்றன. அமாவாசை - பௌர்ணமி நாட்களில் வருபவர்கள், தங்கள் கரங்களினாலேயே பாலும், மலையருவி நீரும் அர்ப்பணிக்கலாம். காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை பாலும், மதியம் 1.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மலையருவி நீரும் அர்ப்பணிக்கலாம். நந்தவனம், சாதனா ஹால் ஆகிய வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ளன. மொபைல், கேமரா, பாதணிகள் ஆகியவற்றை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டு வளாகத்திற்குள் செல்ல வேண்டும்.
தியானலிங்க வளாகத்திற்குள் முதலில் நாம் தரிசிப்பது ஸர்வதர்ம ஸ்தம்பம் எனப்படும் 17 அடி உயர தூண் ஆகும். இதன் மூன்று பக்கங்களிலும் பல்வேறு சமய சின்னங்களையும், நான்காவது பக்கத்தில் மனித உடலின் ஏழு சக்கரங்களையும் பொறித்துள்ளனர். தியானலிங்கம் எல்லா மதத்தினருக்கும் சொந்தம் என்பதை அறிவிக்கும் விதமாக இது இருப்பதாகக் கூறப்படுகிறது. கல்மொட்டுக்களைக் கொண்ட மூன்று படிக்கட்டுகளைக் கடந்தால், பதஞ்சலி முனிவரின் சிலையை தரிசிக்கலாம். ஐந்தடி நிலத்திற்குக் கீழேயும், ஆறடி நிலத்திற்கு மேலேயுமாக மொத்தம் 11 அடி உயரம் கொண்ட திருவுருவம் அது. பாதி பாம்பு - பாதி மனித உடல் கொண்டதே பதஞ்சலியின் திருவுருவம். இதன் நேரெதிரே வனஸ்ரீயின் திருவுருவத்தைக் காணலாம். தங்க இலையுள்ள மரத்தின் வடிவில் அது அமைந்துள்ளது. சிவபெருமானின் மூன்று நிலைகளைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட திரிமூர்த்தி வடிவம் சுவர் சிற்பமாகக் காணப்படுகிறது. லிங்கத்தின் பெண் வடிவமாக லிங்க பைரவி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அருவி சத்தத்தைக் கேட்டுக்கொண்டே தீர்த்தக்குண்டத்தை அடைந்தால், மெர்க்குரி லிங்கத்தை தரிசிக்கலாம். இரண்டடி உயரமும் 680 கிலோ எடையும் கொண்ட பாதரஸ லிங்கம் தண்ணீரில் மூழ்கியபடி காட்சி தருகிறது. மிகப்ப பெரிய ஆவுடையார். 13 அடி 9 அங்குல உயரம் கொண்ட மிகப் பெரிய திருவுருவமாகக் காட்சி தரும் தியான லிங்கத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் பிராண பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட லிங்கம் இது. ஆவுடையாரின் கீழே ஏழு சுற்றுகளாக சுற்றிக் கொண்டிருக்கும் நாகங்கள், பாணத்தில் ஏழு காப்பர் வளையங்கள் என பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம். 76 அடி சுற்றளவும், 33 அடி உயரமும் கொண்ட கருவறை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.