அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோவில் (வெள்ளலூர்)
God Name : தேனீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இங்கு கூடு கட்டி வாழ்ந்த தேனீக்கள், சோலைகளின் மலர்களிலிருந்து உறிஞ்சிய தேனை, சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டன எனவும், தேனீக்கள் தேன் அபிஷேகம் செய்ததால் ஸ்வாமிக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தேனீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். உயர்ந்த பாணம் கொண்டு கம்பீரமாக வெள்ளி பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். பஞ்ச நாகக் குடை, திருவாசி ஆகியன அலங்கரிக்கின்றன. சித்திரை முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. 1008 சங்காபிஷேகம் செய்கின்றனர். ஸ்வாமிக்கு இடப்பக்கமாக அன்னை சிவகாமசுந்தரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகிய கோஷ்ட மூர்த்தங்களும், வலச்சுற்றில் பரிவாரத் தேவதைகளும் காணப்படுகின்றனர். கிழக்கு பார்த்து அமர்ந்த நிலையில் அகஸ்த்திய மாமுனி தரிசனம் தருகின்றார். கன்னி மூலை கணபதி ஒரே கல்லில் வடிக்கப்பட்ட திருவுருவம் என்றும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர்களின் குறிப்பொன்று கூறுகிறது. வன்னி மரத்தடியில் பஞ்சலிங்க தரிசனம் கிடைக்கிறது. கரிவரதராஜப் பெருமாள் கோவிலும், தினேஸ்வரர் - அலங்காநாச்சி எழுந்தருளியுள்ள சிவாலயமும் இவ்வூரில் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.