அருள்மிகு யமதர்மராஜர் திருக் கோவில் (சிங்காநல்லூர்)

God Name : யமதர்மராஜர் மற்றும் சித்திரகுப்தர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

முதலில் ராஜ கணபதியை தரிசித்து ஆசி பெற்று பின் பிரதான கருவறைக்கு செல்கின்றனர். ராஜ கணபதியின் இரண்டு பக்கங்களிலும் நாகங்கள் காணப்படுகின்றன. இவரிடம் பிரார்த்தித்துக் கொண்டு வெல்லம், சர்க்கரை, வாழைப்பழம் துலாபாரமாகத் தருகின்றனர். வில் விதான பிரகார மண்டபத்தில் இரண்டு பெரிய பூத கணங்கள் துவார பாலகர்களாக நிற்கின்றனர். மூலஸ்தானத்தில் வட்டவடிவ மேடையில் யமதர்மராஜர் மூலவராக எழுந்தருளியுள்ளார். இடக்கரத்தில் அங்குசமும், வலக்கரத்தில் பாசக் கயிறும் கொண்டுள்ளார். தமது எருமை வாகனத்தோடு தெற்கு பார்த்து தரிசனம் தருகின்றார். அவருக்கு வலதுபுறமாக சித்திரகுப்தர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் பட்டோலையும் கொண்டுள்ளார். சப்தகன்னியர்கள் வழிபட்ட சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். வீரமாச்சி அம்மன், புடவைக்காரி அம்மன், கன்னிமார், அய்யனார் ஆகிய பரிவாரத் தெய்வங்களையும் காணலாம். யமதர்மரின் தங்கையான ஆண்டிச்சி அம்மன் கோவில் ஒன்றும் அருகாமையிலுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.