அருள்மிகு ஸ்ரீ நாகசாயி மந்திர் (கோயம்புத்தூர்)
God Name : ஸ்ரீ சாயி பாபா
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
1943ஆம் வருடம் சாயி படத்தின் முன்பாக நாகம் ஒன்று படமெடுத்து ஆடியதாகக் கூறப்படுகிறது. விசேஷமாக சங்கு-சக்கர ரேகை தெரிந்ததாம். இதனால் நாகசாயி மந்திர் எனப் பெயர் கொண்டதாகக் கூறுகின்றனர்.
1961ஆம் வருடம் ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் ஆசியுடன் வரதராஜ அய்யா மற்றும் சி.வி. ராஜன் ஆகியோரால் இவ்வாலயம் நிறுவப்பட்டதாகக் கூறுகின்றனர்.
தினமும் சாயி பஜனைகள் நடைபெறுகின்றன. பிரசாதமும் தருகின்றனர்.
சாயி பள்ளிக்கூடம் மற்றும் சாயி தீப் கல்யாண மண்டபம் ஆகியன சேவை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சாயி பாபா மூலவராக எழுந்தருளியுள்ளார்.
மார்பிள் சிலை. சாந்நித்யம் மிக்க சந்நிதி.
புனித துனி (நெருப்பு) பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படுகிறது. இதன் உதி பிரசாதமாகத் தருகின்றனர்.
சாயி உபயோகித்த கைத்தடி ஷீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
அழகிய தங்கத் தேர் ஒன்றும் உள்ளது. வியாழக்கிழமை தினங்களில் மாலை 7 மணிக்கு தங்கத்தேர் பிரகார உலா நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.