அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவில் (ஆதம்பாக்கம்)
God Name : ஸ்ரீ பாண்டுரங்கன்
ரஞ்சன்குடி கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பாண்டுரங்கன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். சாளக்ராம மாலை அணிந்து, இடுப்பில் கைகளை ஊன்றி, காண்போர் மயங்கும் எழில் தோற்றம் கொண்டுள்ளார். அருகே ருக்மணி தேவியார் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தான விமானம் பண்டரிபுரம் போன்றே அமைந்துள்ளது.
சந்நிதியின் எதிரே, ஆமை வடிவில் பஞ்சலோக விக்ரகமாக கூர்மதாசன் எனும் பக்தன் காட்சி தருகிறார். புண்டரீகன் எனும் பக்தனின் சிரசு வாசல்படியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தபோவனத்து ஸ்ரீ ஞானானந்தா கிரி மஹாராஜ் ஸ்வாமிகளின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம்.
முன்மண்டபத்தில் வெங்கடாஜலபதியின் மிகப் பெரிய திருவுருவம் சுதைச் சிற்பமாக உள்ளது. உற்சவ மூர்த்தங்களாக வள்ளி-தேவசேனா சகித சிங்காரவேலர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
சாந்த் துக்காராம், சாந்த் கபீர்தாஸ், சாந்த் மீராபாய், சாந்த் புரந்தரதாஸர், ஸ்ரீ ஆதி சங்கரர் மற்றும் அனேக மஹான்களின் திருவுருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. ஞானேஷ்வரின் ஹரிபாட் எனும் காவியம் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
இ.பி. காலனியில் நாகமுத்து மாரியம்மன் கோவிலும், ஐயப்பன் கோவிலும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.