அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் (கோயம்புத்தூர்)
God Name : பாலதண்டாயுதபாணி சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக பாலதண்டாயுதபாணி சுவாமி எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. இவரது அழகிய திருவுருவம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். எந்த காரியத்தையாவது ஆரம்பிக்கும் முன் இவரிடம் பூ போட்டு அனுமதி கேட்டே செய்கின்றனர். வடக்கு பார்த்து கல்வி விநாயகர் விசேஷ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிரகார வலச்சுற்றில் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமானின் உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம். வட்ட வடிவ அமைப்பில் நவகிரகங்கள் காணப்படுகின்றன. உட்பக்க மதிற்சுவர்களில் - கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம், கந்தர் அநுபூதி, கோளாறு பதிகம் ஆகியனவற்றை கல்வெட்டுகளாக வடித்துள்ளனர். தைப்பூசம், சூர சம்ஹாரம், வைகாசி விசாகம் ஆகிய விழாக்களை சிறப்புற நடத்துகின்றனர். சிறிய ராஜகோபுரமும் வடக்கு பார்த்த வாசலும் கொண்ட கோவில். மரங்கள் நிறைந்த அழகிய நந்தவனமும் உள்ளது. சிறு தொண்டர் இருந்த சத்திரம் இருந்த இடத்தில், இவ்வாலயம் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. தென்மேற்கில் பழைய சத்திரத்து பிள்ளையார் அரசமரத்தடி விநாயகராக எழுந்தருளியுள்ளார். ரத்தினசபாபதிபுரம் என்பதையே சுருக்கி ஆர்.எஸ்.புரம் என்கின்றனர். ரத்ன விநாயகர் ஆர்.எஸ்.புரத்தின் நடுநாயகமாக கோவில் கொண்டுள்ளார். எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். சாந்நித்யம் மிக்க சந்நிதி. துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்களும் சந்நிதி கொண்டுள்ளனர். மாலை நேரங்களில் தேவாரம், திருமுறை சொற்பொழிவுகள் நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.