அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோவில் (கோயம்புத்தூர்).
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை சாரதாம்பாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். கருணை பொங்கும் கண்களும், பிரகாசமான திருமுகமும் கொண்டு சாந்த ஸ்வரூபியாக காட்சி தருகின்றாள். பட்டுப்புடவை கட்டி, தங்க நகைகள் அணிவித்து அலங்காரங்கள் செய்கின்றனர். கல்விக்கு அதிபதி எனப் போற்றப்படும் சரஸ்வதி தேவியே அன்னை சாரதாம்பாள்.
மூலஸ்தானத்தின் இரண்டு பக்கங்களிலும் பால விநாயகரும், பால சுப்ரமண்யரும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். ஆதி சங்கரர் மற்றும் தேவி சண்டிகா பரமேஸ்வரியை தரிசிக்கலாம்.
நித்ய கணபதி ஹோமம், சண்டி ஹோமம் போன்ற ஹோமங்களும், சதுர்த்தி பூஜைகள், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்களும், சாரதாம்பாளுக்கு மஹா அபிஷேகமும் சிரத்தையாக செய்கின்றனர். நவராத்திரி 9 நாட்களும் விதவிதமான அலங்காரங்களில் தரிசனம் தருகிறாள் அன்னை சாரதாம்பாள்.
மஹா சந்நிதானம் அபிநய வித்யார்த்த மஹா ஸ்வாமிகளின் ஆசியுடன் தொடங்கப்பட்ட இவ்வாலயம் சிருங்கேரி மடத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.
108 விநாயகர் கோவில்:
நவராத்திரி கொலுப்படி வரிசை போல், கோபுரமாக அடுக்கடுக்காக 108 விநாயகர்கள் காட்சி தருவது, பார்க்க பரவசமூட்டுகிறது. (ரேஸ்கோர்ஸ் தெருவில் உள்ளது)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.