அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் திருக்கோவில் (பீளமேடு)

God Name : ஸ்ரீ வரத ஆஞ்சநேயர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அபய ஹஸ்தம் கொண்டுள்ளார். எட்டடி உயரத்தில் கோமுகி வடிவில் காணப்படுகிறார். இடது கரத்தில் கதாயுதம் வைத்துள்ளார். வலது உள்ளங்கையில் மஹாலட்சுமி வாசம் செய்கின்றாள். வடக்கு நோக்கி காணப்படும் வால், தரிசிப்போருக்கு தோஷ நிவர்த்தி செய்கிறது. இவருக்குரிய சிறப்பு அம்சங்களைக் குறிக்கவே 'அஷ்டாம்ச' என்று திருநாமத்துடன் சேர்த்து குறிப்பிட்டுள்ளனர். 1. வலது கரம் - பக்தர்களை 'அஞ்சேல்' என ஆறுதல் தருகின்றது. 2. இடது கரத்திலுள்ள கதாயுதம் - பேராசை, கோபம், ஆணவம், காமம் ஆகியவற்றை அழிப்பது. 3. மேற்கு நோக்கி தரிசனம் தருவது. 4. பாதங்கள் இரண்டும் தெற்கு நோக்கி இருப்பது மரண பயத்தை அகற்ற. 5. வால் குபேர திசை நோக்கியிருப்பது, வால் முழுவதும் தரிசிக்க முடிவது, சனி பாதிப்பிலிருந்து காத்திட. 6. சிவலிங்கத் திருமேனியிலேயே ஆஞ்சநேயர் உருவம் அமைந்துள்ளது. 7. வலது உள்ளங்கையில் திருமகள் அமர்ந்திருப்பது. 8. சூரிய - சந்திரர்களை கண்களாக கொண்டுள்ளது. ராஜாமணி பட்டர் என்கிற ஆஞ்சநேய உபாசகருக்கு தென்னாங்கூர் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளால் கொடுக்கப்பட்ட விக்ரகங்களை இங்கு பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.