அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் (கோயம்புத்தூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
கோன் என்றால் அரசன் - கோனி என்றால் அரசி. நகரின் அரசியாகவும் கோவை மாநகரின் காவல் தெய்வமாகவும் விளங்குவதால் கோனியம்மன் என்ற பெயரைக் கொண்டாள். கோவன் என்கிற இருளர் இனத் தலைவன் ஒருவன், காடுகளை வெட்டி சமன் செய்து, புதிய ஊர் ஒன்றை உருவாக்க அரும்பாடு பட்டு உருவாக்கிய ஊர் என்பதால் கோவன்புத்தூர் எனப் பெயர் கொண்டு நாளடைவில் மருவி கோயம்புத்தூர் என்றானதாக கூறப்படுகிறது. காட்டை திருத்திய இருளர் இனத் தலைவன், தான் வசித்த இடத்தில் ஒரு கல்லை நட்டு, அதையே குலதெய்வமாக வழிபட்டான். ஒரு கால கட்டத்தில் அந்த இடம் பாழானது. (துடியலூர் செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே உள்ளது) இளங்கோசர் ஆட்சிக் காலத்தில் சேர மன்னன் ஒருவன் படையெடுத்து வந்தபோது ஓர் கோட்டையையும் மண் மேட்டையும் நிர்மாணித்து, கோட்டையின் காவல் தெய்வமாக கோனியம்மனை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பியதாக கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை கோனியம்மன் சாந்த ஸ்வரூபியாக வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். வலது செவியில் குண்டலமும், இடது செவியில் தோடும் அணிந்து கருணை பொழியும் திருமுகத்துடன் காட்சி தருகிறாள். சூலம், உடுக்கை, வாள், சங்கம் ஏந்திய வலக் கரங்கள் நான்கும், கபாலம், தீ, சக்கரம், மணிகொண்ட இடக் கரங்கள் நான்கும், கூடிய அஷ்ட புஜங்களுடனும், அசுரனை காலால் மிதித்தபடியும் காணப்படுகிறாள். மகா மண்டப சுவற்றில் லட்சுமி - சரஸ்வதி - துர்க்கை - கௌரியின் சுதை சிற்பங்களைக் காணலாம். வலச்சுற்றில் சாந்த விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், தத்தம் மனைவிகளுடன் நவகிரகங்கள், ஆதி கோனியம்மன் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். அரசமரத்தடி மேடை மீது பஞ்சமுக விநாயகர் வலஞ்சுழி திருமேனியாக எழுந்தருளி ஆசி வழங்குகிறார். இரண்டு பக்கங்களிலும் ராஹு - கேது விக்ரகங்கள் காட்சி தருகின்றனர். நாக தோஷ நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்கின்றனர். திருமண நிச்சயதார்த்தங்களை செய்யும்போது இக்கோவிலுக்கு வந்து உப்புக் கூடையை மாற்றிக் கொள்கின்றனர். கோனியம்மனை சாட்சியாக வைத்து உப்பு - மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.