அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் (பாலமலை)
God Name : மூலவர்: அரங்கநாதர்் உற்சவர்: ரங்கநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு: விஸ்வாவஸு எனும் கந்தர்வனின் மகன் துர்தமன் என்பவன், வசிஷ்ட மகரிஷியை அவமதித்ததால் சாபம் பெற்று அரக்க வடிவம் கொண்டான். இம்மலையில் தவம் மேற்கொண்டிருந்த காலவ மகரிஷி எனும் ரிஷியின் தவத்தைக் கலைத்து அவரைத் துன்புறுத்தலானான். ஸ்ரீமன் நாராயணனிடம் சரண் புகுந்தார் ரிஷி. ஸ்ரீமன் நாராயணன் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து துர்தமனை சம்ஹாரம் செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ரிஷியையும் காப்பாற்றி, துர்தமனையும் அரக்க வடிவிலிருந்து விடுவித்து அருளினார் நாராயணன். காலவ ரிஷிக்கு பிரத்யட்சமான அதே கோலத்தில் இங்கே சேவை சாதிப்பதாக ஐதீகம். இத்தலத்து பத்ம தீர்த்தத்தில் நீராடி துர்தமன், அரம்பை மற்றும் கிருதாஸு ஆகியோர் சாபவிமோசனம் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கோவில் கட்டுவதற்கு கற்கள் மற்றும் மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்ததாகவும், கிடைக்கும் இடத்தை பெருமாளே காட்டியதாகவும் குறிப்பொன்று கூறுகிறது. உற்சவத் திருமேனி திருப்பதியில் இருப்பதாகவும், அதை வைத்திருப்பவரின் அடையாளங்களையும் பெருமாளே இவ்வூர் பெரியவரின் கனவில் வந்து கூறியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. நான்கரை மணி நேர மலையேற்றத்திலுள்ள மேல்முடி ரங்கநாதர் ஸ்தலம் இப்பெருமானின் சிரசு என்றும், பாலமலை ரங்கநாதர் வயிற்றுப் பகுதி என்றும், காரமடை ரங்கநாதர் திருவடிப் பகுதி என்றும் ஐதீகம்.
மூலஸ்தானத்தில் மூலவராக அரங்கநாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவர் சுயம்பு வடிவம். மூலவரின் அருகே பஞ்சலோகத்திலான உற்சவ ரங்கநாதர் சேவை சாதிக்கின்றார். நான்கரை அடி உயர அழகிய திருமேனி. மூலவரைப் பார்த்தபடி கருடாழ்வார் கொடி மரத்தருகே காணப்படுகிறார். கருவறைக்கு வெளியே இரண்டு பக்கங்களிலும், வடக்குபுறமாக பூங்கோதை தாயாரும், தென்புறமாக செங்கோதை தாயாரும் எழுந்தருளி அருள் புரிகின்றனர். தன்வந்திரி பகவான், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், பரவாசுதேவன், தும்பிக்கையாழ்வார், ராமாநுஜர், ஆழ்வாராதிகள், சுதர்ஸன-நரசிம்மர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.