அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் (பெரியநாயக்கன்பாளையம்)
God Name : ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். ஒளி வீசும் அழகிய லிங்கத் திருமேனி. மேற்கு பார்த்த சந்நிதி. எதிரே பிரதோஷ நந்தி காணப்படுகிறது. அன்னை மீனாட்சி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மீனாட்சி - சொக்கரின் உற்சவத் திருமேனிகள் மிகவும் அழகாக இருக்கின்றன.
ஸ்ரீ சித்தி - புத்தி விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், ராதா - ருக்மணி சஹித ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி, உஷா - பிரத்யுஷாவுடன் சூரிய நாராயணர், ரோஹிணி சமேத சந்திரன், நீலாம்பிகையுடன் ஸ்ரீ சனீஸ்வரர் என எல்லாத் தெய்வங்களும் தத்தம் மனைவிமார்களுடன் தரிசனம் தருகின்றனர்.
உஷா - பிரத்யுஷா உடனாய சூரியன், ரோஹிணி உடனாய சந்திரன், சக்தி தேவியுடன் அங்காரகன், ஞான தேவியுடன் புதன், தாரா தேவி சமேத ப்ரஹஸ்பதி, சுகீர்த்தி தேவி உடனாய சுக்கிரன், நீலாம்பிகை சஹித சனீஸ்வரர், சிம்வரிகா தேவி உடனாய ராஹு மற்றும் சித்ரலேகா தேவி சமேத கேது என கல்யாண கிரகங்களாக உள்ளனர்.
சிவகாமி சமேத நடராஜர், பார்வதி அம்பிகா சமேத சந்திரசேகரர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
கோயிலுக்குள் நுழைந்ததும் அரசமரத்தடியில் கம்பீரமாக வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரை வணங்கி ஆசி பெறலாம். அடுத்துள்ள தீபஸ்தம்பத்தில் விநாயகர், ஆமை, திரிசூலம், பால் சொரியும் பசு ஆகிய உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. விஷ்ணு துர்க்கை, கால பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.