அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில் (கோவில்பாளையம்)
God Name : காலகாலேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட யமதர்மராஜன், கௌசிக நதிக்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம். காலனுக்கே காலனாகத் திகழ்ந்ததால் காலகாலேஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபத்தில் எழுந்தருளியுள்ளார் காலகாலேஸ்வரர். வரத பரமா தேவி என்று அழைக்கப்படும் கருணாகரவல்லி அம்மன் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மரகத பச்சை நிறத்தில் நந்திப் பெருமான் காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதிக்கு அருகே பெருமாள் சந்நிதியும் உள்ளது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆசியாவிலேயே மிகப் பெரிய திருவுருவம் என்று கூறப்படுகிறது. இக்கோவிலின் வடக்கே கவைய காளியம்மன் கோவில் ஒன்றும் இருக்கின்றது. கருவறையின் மூலவராக கவைய காளியம்மன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள். சூலம், அங்குசம், பாசம், கலசம் ஏந்திய சதுர்புஜங்கள் கொண்ட அழகான திருமேனி. அசுரனின் தலை மீது ஒரு காலையும், ஊன்றியபடி ஒரு காலையும் வைத்து காட்சி தருகிறாள். நவகண்ட சிற்பங்களைக் காணலாம். பஞ்சமுக விநாயகரின் திருவுருவம் அழகாக உள்ளது. தொடர்புக்கு: (0422) 2654422
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.