அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் (சின்னத் தடாகம்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் அன்னை லலிதாம்பிகை நடுநாயகமாக வீற்றிருக்கின்றாள். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். சாட்சாத் அம்பிகையே நம்மிடம் நேரில் வந்து பேசுவது போல இருக்கின்றது. இரண்டு பக்கங்களிலும் மகாலட்சுமியும், சரஸ்வதியும் வெண் சாமரம் வீசும் பாவனையில் உள்ளனர். குரு கணபதி, செல்வ முத்துக்குமர சுவாமி, காமேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி லட்சுமி, விஷ்ணு துர்க்கை, ஆனந்த பைரவர், வனபத்ரகாளி, லட்சுமி நரசிம்மர், நாக கன்னிகைகள், ஆஞ்சநேயர், தன்வந்திரி, அனுக்கிரக நவநாயகர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். 32 அடி உயர த்வஜஸ்தம்பமும், த்வஜஸ்தம்ப கணபதியும் குண்டலினி தத்துவத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு தூண்கள் கொண்ட பெரிய மண்டபத்தில் பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் முதல் பகுதியாக வாக்பவ கூடம் தேவியின் முக மண்டலமாகவும், நடுப்பகுதியாக காமராஜகூடம் சரீரமாகவும், கடைப்பகுதியாக சக்தி கூடம் திருவடிகள் எனவும் மூன்று நிலைகளாக காட்டப்பட்டுள்ளன. கர்க்கிநாதர் எனும் குருநாதர் (சித்தர்) ஜீவசமாதி கொண்டுள்ளதால் குரு பாதுகை அமைத்துள்ளனர். தியானம் செய்ய பளிங்கு மண்டபம், நல்வாழ்வு பயிற்சி முகாம், அன்னதானம் ஆகிய வசதிகள் செய்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.