அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவில் (துடிசையம்பதி)

God Name : விருந்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஸ்தல வரலாறு: குருமரிஷி எனும் முனிவர் இவ்வாலயம் வந்து துடிசை எனும் முரசு வாத்தியம் இசைத்து, இறைவனை வழிபட்டதால் துடிசையம்பதி என்ற பெயரைக் கொண்டது. வடக்கே மதுரநதி ஓடுவதால் வடமதுரை என்ற பெயரைக் கொண்டது. க்ஷேத்ரங்கள் பலவற்றை தரிசித்துக் கொண்டு இவ்வூருக்கு வந்த சுந்தரர், இவ்வாலயத்தின் அருகே வந்தபோது, பசியால் துவண்டு மயக்கமுற்று விழுந்தார். சிவபெருமானும் உமை அன்னையும் வேடுவ தம்பதியினர் கோலத்தில் வந்து, சுந்தரரை தாங்கிப் பிடித்து உட்கார வைத்து உணவளித்தனர். சாதமும் வனமுருங்கை கீரையும் சமைத்து கொண்டு வந்திருந்தனர். இதனால் ஸ்வாமிக்கு விருந்திட்டீஸ்வரர் என்ற பெயர் வந்தது. உணவு உட்கொண்டதால் புதுத்தெம்பு பெற்ற சுந்தரர், தனக்கு உணவு அளித்தவர்கள் ஸ்வாமியும் அம்பாளுமே என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தார் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் விருந்தீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். பங்குனி மாதம் 17ஆம் தேதி காலை வேளைகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூர்ய பூஜை செய்கின்றன. அம்பாள் விஸ்வநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பிள்ளையார், முருகன், அதிகார நந்தி, சூரிய-சந்திரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். வித்தியாசமான தோற்றத்தில் ஸ்ரீ நடராஜர் தரிசனம் தருகிறார். ஸ்ரீ லட்சுமி நாராயணரையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் சேவிக்கலாம். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, இவ்விறைவனை பிரார்த்திக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.