அருள்மிகு விஸ்வரூப முந்தி விநாயகர் திருக்கோவில் (புலியகுளம்)
God Name : முந்தி விநாயகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
திருப்பூர் - ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கோவிந்தம்பாளையம் கிராமத்தில், சந்திரகாந்தக்கல் ஒன்றை தேர்வு செய்தனர். கல்லை தோண்டி எடுத்த இடத்திலேயே வடிவமைத்து (ஒரு பகுதி) இங்கு கொண்டு வந்தனர். சிரசிலிருந்து பீடம் வரை ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட திருவுருவம். பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் பதினான்கு ஆண்டுகளாக அயராது உழைத்து உருவாக்கியுள்ளனர் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவராக முந்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டு கம்பீரமாக அமர்ந்த கோலம். 19 அடி 10 அங்குல உயரமும், 11 அடி 10 அங்குல அகலமும் கொண்ட அழகான திருவுருவம். ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் எனும் சிறப்பை உடையவர்.
திருமேனியின் வலதுபுறம் ஒரு ஆண் யானையின் கம்பீரமும், இடதுபுறம் ஒரு பெண் யானையின் நளினமும் கொண்ட தோற்றம். காதுகள் ஓம் எனும் ப்ரணவ வடிவுடனும், நரம்பு புடைப்புகளுடனும் இருக்கின்றன. அழகிய மத்தகத்துடனும், ஸஹஸ்ர பத்ம கிரிடத்துடனும், வாசுகி சர்ப்பத்தை அரைஞாணாக அணிந்தும் காட்சி தருகின்றார்.
அங்குசமும், பாசக்கயிறும் கொண்ட பின்னிரு கரங்களுடனும், பலாப்பழமும், தந்தமும் கொண்ட முன்னிரு கரங்களுடனும், அமிர்தகலசம் ஏந்திய தும்பிக்கையுடனும் காட்சி தருகின்றார்.
சித்தலட்சுமியின் அம்சமாக திருவடிகளில் தாமரை மலர் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மஹா அபிஷேகம், கணபதி ஹோமம், மற்றும் 108 திருவிளக்கு பூஜைகள் ஆகியனவற்றை சிரத்தையாக செய்கின்றனர். விநாயக சதுர்த்தியின் முதல் நாளே, வேள்விகள் தொடங்கி விடுவார்கள். மறு நாள் காலை 3.30 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மூன்று டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்வார்கள்.
அபிஷேகம் செய்ய திரவியங்கள் 16 லிட்டர் அளவு உபயோகமாகுமாம். வஸ்திரமும் குறைந்தது 16 முழம் இருக்க வேண்டுமாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.