அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில் (கோவில் பாளையம்)

God Name : காலகாலேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட எமதர்மராஜன், கௌசிக நதிக்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது பாவங்களைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. காலனுக்கே காலனாகத் திகழ்ந்ததால், இவ்விறைவன் காலகாலேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.
மூலவர்: காலகாலேஸ்வரர், அம்பாள்: கருணாகரவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராகக் காலகாலேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அம்பாள் வரத பரமா தேவி எனப்படும் கருணாகரவல்லி உடன் எழுந்தருளி தரிசனம் தருகிறாள். கோஷ்ட மூர்த்தங்களும், மரகத நந்தியும் அழகாக இருக்கின்றன. தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அம்பாள் சந்நிதி அருகே பெருமாள் சந்நிதியும் இருக்கிறது. பஞ்சமுக விநாயகரின் வடிவம் அழகாக இருக்கிறது. இக்கோவிலுக்கு வடக்கே கவைய காளியம்மன் கோவில் இருக்கிறது. சூலம், அங்குசம், பாசம், கலசம் ஆகியன ஏந்திய சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவமாக அமர்ந்த கோலத்தில் காளியம்மன் தரிசனம் தருகிறாள். அசுரனின் தலை மீது ஒரு காலையும், முதுகில் ஒரு காலையும் ஊன்றியபடி காட்சி தருகிறாள். நவகண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.