அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (மொண்டிபாளையம்)

God Name : வெங்கடேசப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

இங்கிருந்த புற்றின் மீது பசு ஒன்று பால் சொரிவதை, இவ்வூரை சேர்ந்த கொண்டமாணிக்கர் என்பவர் கண்டார். சங்கு-சக்கரதாரியாக பெருமாள் வெளிப்படுவதைக் கண்டு பரவசமடைந்தார். பின்னர் இங்கு ஆலயம் எழுப்பப்பட்டது என ஸ்தல வரலாறு. தை மாதப் பெருந்திருவிழா, தெப்பம், தேர் என அமர்க்களப்படும். கருட சேவைக்குரிய பணத்தைச் செலுத்தினால் உற்சவர் கருடாழ்வார் மீது பவனி வருவார். மனநோய், தீவினைகளால் பாதிப்பு கொண்டோர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து பெருமாளை வழிபடுகின்றனர். வேப்பங்கொழுந்து, வெள்ளெருக்கு, மொட்டு, துளசி, ஊஞ்சல் கரி, ஸ்வாமி மெழுகு ஆகியன சேர்த்து சாந்து தயாரித்து மருந்தாக தருகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷம். தினமும் 10.30 - 12.00 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் திருப்பதியில் நடத்துவதைப் போன்றே செய்கின்றனர். சுதர்ஸன ஹோமங்களும், பௌர்ணமி தினத்து மாலை வேளையில் சத்யநாராயணா பூஜையும் சிரத்தையாக செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக வெங்கடேசப் பெருமாள் தாமரை மொட்டு போன்ற லிங்க வடிவில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சுயம்பு மூர்த்தம். பெருமாளின் திருமுகம் நான்கு புறமும் தட்டையாகவும் மையத்தில் கூம்பு போலவும் இருக்கின்றது. இந்த திருவுருவத்தின் மீது தங்க முலாமிட்ட புடைப்பு சிற்பமாக பெருமாள் தரிசனம் தருகின்றார். கிழக்கே திருமுக மண்டலம். நின்ற திருக்கோலம். பெருமாளை சேவித்தபடி கருடாழ்வார் காட்சி தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. அலர்மேல் மங்கைத் தாயார் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஆஞ்சநேயர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகியோரை சேவிக்கலாம். மண்டபத்திலுள்ள சிற்பங்கள் அரிதானவை. பரமபத வாசலில் ஸ்ரீவைகுண்ட நாராயணன், லட்சுமி தேவியுடன் காட்சி தருகின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.