அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி
God Name : அவிநாசியப்பர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
அ - விநாசி .. அதாவது 'அ' என்பது இன்மையைக் குறிக்கும், 'விநாசி' என்றால் விநாசம், அழிவு. அவிநாசி என்றால் எக்காலத்திலும் விநாசம் இல்லாத என்று பொருள். விநாசம் இல்லாத ஊர் அவிநாசி.
சங்காரம் காரணமாக பிரளய வெள்ளத்தில் நின்று பிரளய தாண்டவம் ஆடினார் சிவபெருமான். பார்த்துக் கொண்டிருந்த உமையன்னை பிரளய வெள்ளத்தில் அடங்கி விட அக்னி தாண்டவமாக சுத்த சங்காரதாண்டவம் ஆடினார்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவம் கண்டு பயந்த தேவர்கள், இத்தலத்தில் ஒளிந்து கொண்டனர். புகுந்து ஒளிந்த ஊர் புக்கொளியூர் என்றானது.
காசி விஸ்வேஸ்வரனிடமிருந்து ஒரு வேர் கிளையாகப் பிரிந்து வந்து இங்கு முளைத்து அவிநாசியப்பர் ஆனதாகத் தல வரலாறு. காசியில் வாசி அவிநாசி என்பர்.
இத்தலத்தில் உமையன்னை ஓர் மாமரத்தின் கீழ் அமர்ந்து தவம் மேற்கொண்டாள். அன்னையின் தவத்தை மெச்சி பிரத்யட்சமான இறைவன் உமையவளுக்கு பெருங்கருணை நாயகி எனப் பெயர் சூட்டி, தமது வலது பாகத்தில் இருக்கப் பணித்தார் எனத் தல வரலாறு.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரின் மாடவீதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரெதிரான வீடுகள் இரண்டில், ஒரே காலத்தில், ஒரு வீட்டில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது. அது குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன், இவ்விரண்டு வீடுகளை சேர்ந்த சிறுவர்கள் இருவர், நீராட குளத்திற்கு சென்றனர் என்றும், ஒரு சிறுவனை மடுவிலிருந்த முதலை விழுங்கிவிட்டது என்றும் மற்றொரு சிறுவனுக்கு இன்று உபநயனம் நடக்கின்றது என்றும் ஊர் மக்கள் கூறினார்கள். இக்காரணத்தினால் ஒரு வீட்டில் மங்கல ஒலி என்றும் மறு வீட்டில் அழுகை ஒலி என்றும் கூறினார்கள்.
அவிநாசியப்பரை தரிசிக்கும் முன்பாக இறந்த சிறுவனின் பெற்றோர்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த சுந்தரர், இவ்வூர் குளத்தை நோக்கி சென்றார். ஊர் மக்களும் பின் தொடர்ந்தனர்.
நீர் இல்லாமல் வற்றியிருந்த குளத்திற்கு முன் நின்று, இறைவன் மீது பதிகங்கள் பாடலானார். முதல் பதிகத்திலேயே பெருமழை பெய்து வறண்ட குளத்தில் நீர் நிரம்பலாயிற்று. இரண்டாம் பதிகத்தில் முதலை வந்து சேர்ந்தது. மூன்றாம் பதிகத்தில் ருத்ரன், பிரம்மன், யமன் ஆகிய மூவரும் தோன்றி இறந்த சிறுவனின் உயிரைத் திரும்ப தந்தனர். நான்காம் பதிகம் முடிக்கும் முன் குளத்திலிருந்து வெளி வந்த முதலை, விழுங்கிய பிள்ளையை, அன்று வரை சென்ற வயது நிரம்ப, கரை சேர்த்தது எனத் தல வரலாறு. பிறகு மீட்கப்பட்ட சிறுவனுக்கு சுந்தரரே உபநயனம் செய்வித்ததாக கூறப்படுகிறது.
மூலவர்: அவிநாசியப்பர், அம்பாள்: கருணாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அவிநாசியப்பர். அவிநாசியாளுடைய நாயனார் எனக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. சுயம்பு லிங்க வடிவம்.
சிவபெருமானின் வலது பாகத்தில் கருணாம்பிகை அன்னை சந்நிதி கொண்டுள்ளார்.
அம்பிகையின் சந்நிதி பின்பறமாக காணப்படும் மாடத்தில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். விஷ ஜந்துக்களால் ஆபத்து நேராது என நம்பிக்கை. விருச்சிகம் - தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட்டு பூஜிக்கின்றனர்.
அம்பாள் கர்ப்பக்ரஹ வடபுற சுவற்றில் கோமுகமும், அதையடுத்து சண்டிகேஸ்வரியின் சந்நிதியும் காணலாம்.
70 அடி உயர தீபஸ்தம்பத்தில் - விநாயகர், சுந்தரர், முதலை வாய் பிள்ளை, மீன் வாய் சிவலிங்கம் ஆகிய புடைப்பு சிற்பங்களைக் காணலாம். தீபஸ்தம்பத்தில் கைத்தாளம் போட்டு நிற்கும் சுந்தரர் ஆகிய அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
அம்பிகை சந்நிதி செல்லும் வழியிலுள்ள கல்யாண மண்டப மேடையில் செப்பு விக்ரஹங்கள் உள்ளன. சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், வேடன் தோற்றத்தில் முருகன் ஆகிய உற்சவ விக்ரஹங்களை தரிசிக்கலாம்.
ஸ்வாமி - அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே முருகன் சந்நிதி கொண்டிருப்பது, சோமாஸ்கந்த வடிவம் என்பார்கள்.
நவ்ரங் மண்டபத்தில் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். கங்காளர், அகோர வீரபத்ரர், திருவாலங்காட்டு பத்ரகாளி ஆகிய எழில்மிகு சிற்பங்கள் தூண்களில் இடம் பெற்றுள்ளன.
முன் மண்டபத்தில் செல்வ விநாயகர் வடக்கு நோக்கி எழுந்தருளி ஆசி வழங்குகிறார். மற்றும் நடன விநாயகரையும், 32 விநாயகர்களின் வடிவங்களையும் தரிசிக்கலாம். கோபுர வாசலில் சுந்தரரும், மாணிக்கவாசகரும் இறைவனைப் பார்த்தபடி நிற்கின்றனர்.
அறுகோண அமைப்பில் கட்டப்பட்டுள்ள சந்நிதியில் செந்தில்நாதனை தரிசிக்கலாம். பாலதண்டபாணி, சுப்ரமண்யர் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம்.
பிரகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள், காலபைரவர், அறுபத்திமூவர், நவகிரகங்கள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
குமார சுப்ரமண்யர், வீரபாகு ஆகியோரின் செப்பு படிமங்கள் அழகாக இருக்கின்றன.
இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் வடைமாலை சாத்தி பிரார்த்தித்துக் கொள்கின்றனர். மிகுந்த வரப்பிரசாதி.
தேவாரத்திருத்தலம்.
கரிவரதராஜப் பெருமாள் கோவிலொன்றும் இவ்வூரில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.